Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெண் காவலர்களை பாராட்டி ஆல்பம் வெளியிட்ட இசையமைப்பாளர் சத்யா

28 ஏப், 2020 - 14:21 IST
எழுத்தின் அளவு:
Music-director-Sathya-relese-album-for-Women-police

பிரபல தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர் சி.சத்யா. இவர் கொரோனா காலத்தில் பெண் காவலர்களின் உழைப்பையும், தியாகத்தையும் பாராட்டி ஆல்பம் ஒன்றை வெளியிடுள்ளார். இதில் பிரியா ஹமேஷ், மாளவிகா ராஜேஷ், பாம்பே பாக்யா பாடி உள்ளனர்.

இதுகுறித்து சத்யா கூறியதாவது: கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண் காவலர்களின் பணி முக்கியமானதாகவும், கடினமானதாகவும் இருக்கிறது. ஆனால் இதுபற்றி யாரும் அதிகமாக பேசவில்லை. கொரோனா ஊடங்கு அறிவித்த பிறகு விழித்திரு தனித்திரு என்ற ஆல்பத்தை வெளியிட்டேன்.

இந்த ஆல்பத்தை பாராட்டிய துணை போலீஸ் கமிஷனர் எச்.ஜெயலட்சுமி பெண் காவலர்களின் பணி, அவர்களின் தியாகம் பற்றி என்னிடம் கூறினார். அப்போது பெண் காவலர்களின் தியாகத்தை சொல்லும் ஒரு ஆல்பம் உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன்.

பாடலுடன் பெண் காவலர்கள் செய்யும் கடினமான பணிகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை படம்பிடித்து அதனை கொரோனா ஆன்தம் என்கிற பெயரில் வீடியோ ஆல்பமாக தயாரித்துள்ளேன். மக்களை பாதுகாக்க பெண் காவலர்கள் இரவும், பகலும் பணியாற்றி வருகிறார்கள். அதனை இந்த ஆல்பம் வெளிச்சம் போட்டு காட்டும். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எளிய முறையில் நடந்த பெண் உதவி இயக்குனர் திருமணம்எளிய முறையில் நடந்த பெண் உதவி ... யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட இஸ்லாமிய பாடல் யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in