துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
எக்காலத்திற்கும் ஏற்ற எதுகை மோனையுடன் எழுதப்பட்ட இலக்கணப் பிழையில்லா கவிதை... வண்ண தூரிகையால் வனப்புடன் வரையப்பட்ட உயிரோவியம்... காலமெல்லாம் இளம் நெஞ்சங்களை பரவச கனவில் பதற வைக்கும் பவளப்பெண் காவியம் பார்வதி நாயர், தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்த தருணம்...
பிறந்தது... குடும்பம்...
கேரளா பூர்வீகம். பிறந்தது அபுதாபி. அப்பா வேணுகோபால் தொழிலதிபர். அம்மா ஆசிரியையாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
படிப்பு...
பி.இ.,
சினிமாவிற்கு முன்...
மாடலிங் செய்தேன். 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளேன். 'மிஸ் கர்நாடகா', 'மிஸ்தேவி குயின் ' பட்டங்கள் வென்றுள்ளேன்.
நடித்துள்ள படங்கள்
மலையாளத்தில், 'பாப்பின்ஸ்', 'யக்சி', 'நீ கோ நிஜா சா', 'டால்சு', 'டி கம்பெனி', 'ஆங்கிரி பேபிசு' இன் லவ்', கன்னடத்தில் 'ஸ்டோரி கதே', 'வாஸ்கோடாகாமா', தெலுங்கில் ' ஜன்டா பாய்' என ஏராளமான படங்களில் நடித்துள்ளேன்.
'கிளாமர் ' பற்றி...
கதைக்கு தேவை என்றால், கிளாமராக நடிப்பது தவறில்லை.
தமிழ் சினிமா பற்றி...
அர்ப்பணிப்போடு நடித்தால் வந்தவர்களை வாழ வைக்கும் பூமி. போட்டிகள் நிறைந்தது தமிழ் சினிமா.
தமிழில் வாய்ப்பு
ஜெயம் ரவி நடித்த 'நிமிர்ந்து நில்' மூலம் 2014ல் தமிழில் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின், 'எங்கிட்ட மோதாதே', 'கோடிட்ட இடத்தை நிரப்புக', 'ஆலம்னா' என ஏராளமான படங்களில் நடித்து விட்டேன்.
நடிக்க வந்தது
பதினோரு வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். கல்லூரியில் படிக்கும் போது, சினிமாவா, படிப்பா என்ற போராட்டத்தால் பட வாய்ப்பை இழந்தேன்.
'பிரேக்' தந்த படம்
அஜித்தின் ' என்னை அறிந்தால்' மூலம் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையானேன். கமலின் 'உத்தம வில்லனில்' நடித்தது இன்னும் 'ஸ்கோப்' கிடைத்தது.
பொழுது போக்கு
பேஷன் டிசைன்ஸ், ஓவியம் வரைதல்.
நடிக்க விரும்பும் கேரக்டர்...
கிளாசிக் நடிகை சாவித்திரி என்னை கவர்ந்தவர். நயன்தாராவிற்கு கிடைத்த 'கோலமாவு கோகிலா', 'அறம்' போல் கிடைத்தால் வெளுத்து வாங்குவேன்.
ரசிகர்கள் பற்றி...
பல மொழிகளில் நான் நடித்தாலும், தமிழில் தான் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அவர்களின் ஆசி எப்போதும் வேண்டும்.