Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜோதிகா பேச்சில் சமத்துவம் இல்லை; நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது : காயத்ரி ரகுராம்

27 ஏப், 2020 - 18:47 IST
எழுத்தின் அளவு:
Gayathiri-oppose-Jyothikas-speech-about-Tanjore-temple

நடிகை ஜோதிகா, சமீபத்தில் விருது விழா ஒன்றில் பேசும்போது, தஞ்சாவூரில் படப்பிடிப்புக்காக சென்றிருந்தேன். அங்குள்ளவர்கள் தஞ்சை கோவிலின் பெருமையை கூறினார்கள். அங்கு செல்ல வேண்டும் என்றார்கள். நான் ஏற்கனவே பார்த்துள்ளேன் என்றேன். மறுநாள் படப்பிடிப்புக்காக கோவில் அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அந்த மருத்துவமனையை பார்த்துவிட்டு இந்த கோவிலுக்கு செல்ல மனம் வரவில்லை. கோவிலில் காசு போடாதீர்கள். கோவில்களை பராமரிப்பது போன்று மருத்துவமனை, பள்ளிக்கூடங்களை பராமரியுங்கள் என்றார். ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு ஹிந்து மத தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டரில், நடிகர்களுக்கு கோவில் கட்டுபவர்களுக்கு அவ்வளவு தான் அறிவு. இவர்களிடம் சனாதன தர்மத்தை எதிர்பார்க்க முடியாது. தி.மு.க, தி.க., நாம் தமிழர் உள்ளிட்ட சில கட்சிகளில் கைக்கூலிகளாக இருப்பவர்கள் ஆதாரமற்ற கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஜோதிகா பேச்சை நியாயப்படுத்துவது வெட்கக் கேடானது. கண்டிப்பாக ஜோதிகா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அவரின் பேச்சில் சமத்துவம் இல்லை. அவர் பேசும்போது கோவில்களுடன் தேவாலயம், மசூதியை உள்ளடக்கியிருக்க வேண்டும். ஜோதிகாவின் பேச்சை திமுக., உள்ளிட்ட சில கட்சிகள் பிற மதத்தை கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

ஜீயர் கண்டனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோப ராமானுஜரும் ஜோதிகாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தஞ்சாவூர் கோவில் தொடர்பாக நடிகை ஜோதிகா கூறிய கருத்து வருத்தமளிக்கிறது. கோவில்களில் பணம் போடாதீர்கள் என்று கூறுவது தவறானது. கோவில்கள் இருப்பதால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதேப்போன்று ஜோதிகாவின் குடும்பத்தார் நிறைய முறை பேசியிருக்கிறார்கள். இப்படி கூறுவது மிகவும் தவறு கண்டிக்கத்தக்கது. இனிவரும் காலங்களில் இந்துமதம் குறித்து இவ்வாறு பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (65) கருத்தைப் பதிவு செய்ய
ஊரடங்கு எப்போது முடியும்? விவேக் சூசகம்ஊரடங்கு எப்போது முடியும்? விவேக் ... புஷ்பா ரகசியத்தை உறுதி செய்த ராஷ்மிகா புஷ்பா ரகசியத்தை உறுதி செய்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (65)

kavimohan pillai - ahmedabad ,இந்தியா
30 ஏப், 2020 - 09:19 Report Abuse
kavimohan pillai மிக்க நன்றி காயத்ரி அவர்களே. இந்துக்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு.
Rate this:
SaiBaba - Chennai,இந்தியா
29 ஏப், 2020 - 14:22 Report Abuse
SaiBaba முன்னொரு சமயம் ரஜினிகாந்த் திரையுலகுக்கு வந்து நாற்பது ஆண்டுகள் ஆனதற்கு லதா ரசிகர்களிடம் பணம் பெற்று விழா நடத்தினார். ரஜினி ஒன்றும் சொல்லாமல் விழாவில் கலந்து கொண்டார். பாலச்சந்தர் லதாவின் முயற்சியை வெகுவாகப் பாராட்டினார். பத்திரிக்கைகள் நார் நாராக கிழித்தன. என்ன இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று லதா கேட்டார். அதற்கு ரஜினி, பணம் பெற்று விழா நடத்தினால் அப்படிதான் எழுதுவார்கள். கேட்டுக்கொள்ளவும் பக்குவம் வேண்டும் என்று சொன்னார். அந்த பிரச்சினை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அத்துடன் அடங்கியது. அது போல எத்தனையோ சர்ச்சைகளை கடந்து ஒரு முதிர்ச்சியுடன் அவற்றை அணுகி இன்றும் நிலைத்து நிற்பவர் ரஜினி.
Rate this:
SaiBaba - Chennai,இந்தியா
29 ஏப், 2020 - 14:11 Report Abuse
SaiBaba அறிவுரை சொல்றதுக்குன்னு ஒரு வாய் வேணும். யார் வேணாலும் அறிவுரைகளை வீச முடியாது. விவேகானந்தர் சொல்றத ஹிந்துக்கள் கேட்டுக்குவாங்க. ஜோதிகா சொல்றத எதுக்கு ஹிந்துக்கள் கேட்டுக்கணும்?
Rate this:
SaiBaba - Chennai,இந்தியா
29 ஏப், 2020 - 14:09 Report Abuse
SaiBaba விவேகானந்தரும் ஜோதிகாவும் ஒண்ணுங்களா?
Rate this:
mei - கடற்கரை நகரம்,மயோட்
29 ஏப், 2020 - 12:29 Report Abuse
mei ஜோதிகா மட்டுமில்ல, சூர்யா, கார்த்தி, பார்த்திபன் படங்களையும் இந்துக்கள் புறக்கணிக்கவேண்டும்
Rate this:
மேலும் 60 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in