பீச் மணலில் அஞ்சனாவின் போட்டோஷூட் | தமிழுக்கு வரும் கிரேஸ் ஆண்டனி | ஹன்சிகாவின் புதிய திரில்லர் படம் துவக்கம் | கருணாஸ் மகள் திருமணம் | கமலை சந்தித்த பிக்பாஸ் டைட்டிலை இழந்த விக்ரமன் | 'கேஜிஎப் 2' வசூலை முறியடித்து 2ம் இடம் பிடித்த 'பதான்' | ‛விடுதலை' பாடல் ; நன்றி சொன்ன சூரி - 'லவ் யு' சொன்ன தனுஷ் | ஸ்ரீதேவி பற்றிய புத்தகம் தயார் | இந்தியத் திரையுலகமாக ஆகிடுச்சி - தனுஷ் | படிப்பு தான் மரியாதையை சம்பாதித்து தரும் - ‛வாத்தி' டிரைலர் வெளியீடு |
தெலுங்கில் பிஸியான நடிகையாக இருப்பவர் பாயல் ராஜ்புட். தமிழில் வினய்க்கு ஜோடியாக இருவர் உள்ளம் என்ற படத்தில் நடித்தார். ஐந்தாண்டுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலினுடன் ஏஞ்சல் படத்தில் நடித்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாயல், ரசிகர்களுடன் உரையாற்றினார். அப்போது ரசிகர் ஒருவர், "ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீங்களா?" என கேட்டார். அதற்கு, நேரடியாக பதில் கூறாமல், இரு கைக்கூப்பி கும்பிடுவது போன்ற எமோடிகானை பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள், "ஆளவிடுங்க சாமி" என்ற அர்த்தத்தில் தான் பாயல் பதிலளித்திருப்பதாக புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் அவர் உண்மையில் அந்த அர்த்தத்தில் தான் பதில் அளித்தாரா என்பது அவருக்கே வெளிச்சம்.