துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானாலும் இந்திய நடிகை என பெயர் வாங்கியவர் நடிகை பார்வதி.. நிறைவான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பதால் குறைவான படங்களிலேயே நடித்துள்ள பார்வதி இயல்பான நடிப்புக்கு பெயர் போனவர்.. அப்பட்டிப்பட்டவர் தான் முதன்முதலாக கேமராவுக்கு முன் நிற்பதற்காக பயந்து அழுத சுவாரஸ்ய நிகழ்வை, சிறு வயது புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“என்னை மட்டும் தனியாக புகைப்படம் எடுப்பதற்காக கேமரா முன் நிறுத்தினார்கள்.. அந்த கேமரா லென்ஸை பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்தது.. மேலும் சுற்றி நின்றவர்கள் பார்வை முழுதும் என் மீதே இருந்ததால் பயத்தில் அழ ஆரம்பித்துவிட்டேன்.. நீண்ட நேரமாக அழுகை நிற்காததால் நிறைய மிட்டாய் (ஜெம்ஸ்) தருவதாக சொல்லி ஏமாற்றி என்னை போஸ் கொடுக்க வைத்தனர்.. அதையும் நம்பி அந்த வயதிலேயே நான் எப்படி முகபாவம் காட்டி இருக்கிறேன் பாருங்கள்” என குழந்தை பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் பார்வதி.