‛மயோன் 2' உருவாகிறது | யானை படம் : பிரியா பவானி சங்கர் நம்பிக்கை | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கிர்த்தி ஷெட்டி | திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை : ஸ்ருதிஹாசன் | மதுரைக்கார இளைஞனாக மாறும் ஆர்யா | கமலுக்கு கோல்டன் விசா | பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ஓபராய் புகழாரம் | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு | இயக்குனர் சங்கத்திற்காக ஒன்றிணையும் ஜீத்து ஜோசப் - பிரித்விராஜ் | மோகன்லாலுக்கு வில்லனாக மாறும் ஹரீஷ் பெராடி |
இயக்குனர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக இருந்து, டைரக்டராக உயர்ந்து பின்னர் ஹீரோவாக கலக்கியவர் ராமராஜன். கரகாட்டக்காரன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.
மண்ணுக்கேத்த பொண்ணு, மருதாணி, சோலை புஷ்பங்கள், நம்ம ஊரு நல்ல ஊரு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, ராமராஜன் மீண்டும் படம் இயக்க முடிவு செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதியிடம் ராமராஜன் கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த கதை விஜய் சேதுபதிக்கும் பிடித்திருக்கிறதாம்.
இதுகுறித்து விஜய் சேதுபதி தரப்பில் விசாரித்தபோது "விஜய்சேதுபதியிடம் ராமராஜன் கதை சொன்னது உண்மைதான். ஆனால் நடித்து தருவதாக எந்த உத்தரவாதமும் தரவில்லை. தற்போது கொரோனா ஊரடங்கால் 2 மாத கால்ஷீட்கள் வீணாகி இருக்கும் நிலையில் கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொடுக்கவே 2021 இறுதி வரை ஆகும் என்றார்கள்.
ராமராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பாரா இல்லையா என்பது சம்பந்தப்பட்டவர்கள் அறிவித்தால் மட்டுமே உறுதியான தகவலை தெரிந்து கொள்ள முடியும்.