சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இந்தப்படத்தில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கத்தி படத்தை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் விஜய்யின் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த பிப்-14 அன்று இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ள குட்டி ஸ்டோரி என்கிற பாடலின் லிரிக் வீடியோவை வெளியிட்டனர்.. அருண்ராஜா காமராஜ் எழுதிய இந்தப்பாடலை மேடைதோறும் குட்டிக்கதைகள் சொல்வதில் புகழ்பெற்ற விஜய்யே பாடியிருந்தார்.
இந்தப்பாடல் யூடியூப்பில் வெளியாகி 73 ஆன நிலையில் 50 மில்லியன் பார்வையாளர்கள் இதுவரை இந்த பாடலை பார்த்துள்ளனர். அதுமட்டுமல்ல 1.6 மில்லியன் லைக்குகளையும், ஒரு லட்சத்து 13 ஆயிரம் டிஸ்-லைக்குகளையும் பெற்றுள்ளது. இதற்கு முன் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான வெறித்தனம் பாடலின் லிரிக் வீடியோவும் 50 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.