Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜோதிகா பேச்சுக்கு நான் ஆதரவா? விஜய் சேதுபதி விளக்கம்

25 ஏப், 2020 - 16:34 IST
எழுத்தின் அளவு:
Did-Vijay-Sethupathi-supports-Jyothika

சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகை ஜோதிகா, கோயில்களை பராமரிப்பதைவிட, மருத்துவமனைகளை பராமரிப்பது தான் மிகவும் முக்கியம் என்றார். உதாரணத்துக்கு அவர் தஞ்சை பெரிய கோயிலை சுட்டிக் காட்டினார். அவரது அந்த பேச்சுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஜோதிகா ஏன் அப்படி பேசினார் என்பது குறித்து இயக்குனர் இரா.சரவணன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் ஜோதிகாவுக்கு தான் ஆதரவு அளிப்பதாக நடிகர் விஜய் சேதுபதி டுவீட் செய்தது போன்ற ஸ்கிரீன்ஷாட் இமேஜ் ஒன்று வாட்ஸப்பில் வைரலானது. அதில், "ஜோதிகாவின் துணிவான பேச்சுக்கு பாராட்டுகள். அவருக்கு ஏதாவது பிரச்சினை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன். மனிதனை மனிதன் தான் காப்பாற்ற முடியும். கடவுளால் வேடிக்கை தான் பார்க்க முடியும். கோயில்கள் மருத்துவமனைகளாக மாறும் காலம் நெருங்கிவிட்டது", என குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால், இந்த ஸ்கிரீன்ஷாட் போலியானது என விஜய் சேதுபதி மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த ஸ்கிரீன்ஷாட் புகைப்படத்தை பகிர்ந்து, அது போலியானது என அவர் டுவீட் செய்துள்ளார். மறுப்பு தெரிவித்தள்ளாரே தவிர ஜோதிகா விஷயத்தில் தனது நிலைபாடு என்ன என்பது குறித்து அவர் கருத்து எதுவும் அதில் தெரிவிக்கவில்லை.

Advertisement
கருத்துகள் (26) கருத்தைப் பதிவு செய்ய
ஹாலிவுட் படங்கள் வெளியீடுகள் தள்ளி வைப்பு ?ஹாலிவுட் படங்கள் வெளியீடுகள் தள்ளி ... திருமணநாளில் பிருத்விராஜுக்கு ஏற்பட்ட சங்கடம் திருமணநாளில் பிருத்விராஜுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (26)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01 மே, 2020 - 08:59 Report Abuse
skv srinivasankrishnaveni இந்திராபோனாங்க நாடு செத்துப்போச்சுன்னுபினாத்திச்சு ஒருகூட்டம் எம் ஜீ ஆர் செத்தாரு இப்படியேதான் தமிழ்நாட்டுக்கு நோ கதிமோக்ஷம் னு உளறினாக இப்போது ஜெயா போனாங்க ஐய்யய்யோ ஜெயம்மாயிலேதான் எல்லோரும் உளறினே இருக்காங்க என்று கூச்சல் சகிக்கலீங்க EPS ஆட்ச்சி நன்னாவே இருக்கு முதல்ல சித்த தடுமாறினாலும் இப்போது சுதாரிச்சுட்டு நல்லாட்சி தரங்க சட்டம் படிச்சவரு நம்மளுக்கு இப்போதான் ஒரு படிச்சவர் முதல்வராக இருக்காங்க நாம் தான் கோஆப்ரேட் பண்ணவேண்டும் புதுசா வேலைக்கு சேரும் ஒரு நபர் எப்படி பெரியபொறுப்புலே சேர்ந்தால் தடுமாறுவாரோ அதேபோலத்தான் அந்தம்மா எல்லாம் தானே என்று ஆட்சி செய்தாங்க ஏவாளை நம்பவே இல்லே இது உண்மை மகம் ஸ்டார் லே பிறந்தபொண்ணுகள் அநேகமா டாமினேட்டிங் கேரக்டராகவே இருப்பாங்க அது இந்தம்மா விஷயமலே ௧௦௦%கரெக்ட் ஆகா இருந்துது . இப்போது தான் நல்லாட்சி இருக்கு
Rate this:
Ramona - london,யுனைடெட் கிங்டம்
29 ஏப், 2020 - 20:15 Report Abuse
Ramona நடிப்பு துறையில் கிடைக்கும் பணத்தை விட, மத மாற்றம் செய்யும் துறையில் கொள்ளை பணத்தை அள்ள முடியும். வருமான வரி இல்லை, கணக்கில் காட்ட வேண்டிய நிர்பந்தம் இல்லை, ஏனெனில் இது பாரதம், எதையும் தாங்ககூடிய தேசம்.
Rate this:
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
29 ஏப், 2020 - 10:17 Report Abuse
Raghuraman Narayanan இவர் நடிப்போது நிறுத்தி கொள்ளலாம். இவர் ஜோதிகாவிடம் மற்ற மதத்தின் வழிபாட்டு தளத்துக்கு அருகில் இருக்கும் மருத்துவ மனைகளையும் பார்த்து அதே மாதிரி கூற சொல்லட்டுமே பார்க்கலாம்.
Rate this:
29 ஏப், 2020 - 01:29 Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா இந்திய அரசு இரும்புக்கரம் கொண்டு இதுபோன்ற வேண்டாத தகவல்களை பகிர்பவர்களை ஒடுக்க வேண்டும். செல் போன் இணைப்பை பெற எப்படி புகைப்படம், மற்றும் இருப்பிட முகவரி முக்கியமோ அது போல சமூக வலைத்தளங்களில் கணக்கு ஆரம்பிக்க அது போன்ற ஆவணங்கள் கட்டாயம் என்று சட்டம் இயற்ற வேண்டும். இப்போது சமூக ஊடகங்கள் மனநலம் குன்றியவரின் கையில் கிடைத்த துப்ப்பாக்கி போல சிக்கி சிலர் கைகளில் சிக்கி நாட்டை சீரழித்துக்கொண்டு இருக்கிறது. தவறான நோக்கம் கொண்டவன் கையில் கையில் கிடைக்கும் சமூக ஊடகமானது உயிர் கொல்லும் ஒரு துப்பாக்கிக்கு இணையானது. மனித குலத்துக்கு எதிராக இந்த சமூக ஊடகங்கள் மாறிவிடும் நாள் மிகத்தொலைவில் இல்லை.
Rate this:
siriyaar - avinashi,இந்தியா
27 ஏப், 2020 - 18:47 Report Abuse
siriyaar ஜோதிகா நடிகை அனதை விட நர்சு ஆகியிருக்கலாம்
Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in