Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - உலகம் சுற்றும் வாலிபன்

25 ஏப், 2020 - 13:49 IST
எழுத்தின் அளவு:
MGRs-ulagam-sutrum-valiban

படம்: உலகம் சுற்றும் வாலிபன்
வெளியான ஆண்டு: 1973
நடிகர்கள்: எம்.ஜி.ஆர்., மஞ்சுளா, லதா, அசோகன்
இயக்கம்: எம்.ஜி.ஆர்.,
தயாரிப்பு: எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ்

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன். ஆம்... தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க., துவங்கிய பின், இப்படம், அக்கட்சி கொடியுடன், படம் வெளியானது. இப்படத்திற்கு, அப்போதைய ஆளும்கட்சியான, தி.மு.க., பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியது. அதை தகர்தெறிந்து, எம்.ஜி.ஆர்., வெற்றி வாகை சூடினார்.

இப்படத்தல், எம்.ஜி.ஆருக்கு, இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலை பிடித்து, அதை ஆக்கபூர்வ பணிக்கு பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின், 'பார்முலா'வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். இதை, விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான, ராஜூ, எதிரிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கிறார் என்பது தான், கதை.

முருகன், ராஜூ என, இரண்டு கதாபாத்திரங்களையும், எம்.ஜி.ஆர்., ஏற்று நடித்திருப்பார். லதா, மஞ்சுளா, சந்திரகலா என, மூன்று கதாநாயகியர். நாடு, நாடாக பயணிக்கும் சர்வதேச கதை, அதை திறமையாக கையாண்டு இருப்பார், இயக்குனர், எம்.ஜி.ஆர்.

விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர், பாடல்களை எழுதினர். 'நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், பச்சைக்கிளி முத்துச்சரம், நிலவு ஒரு பெண்ணாகி, சிரித்து வாழ வேண்டும்' உட்பட, அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன.

'மசாலா நடிகர்' என நினைத்துக் கொண்டிருக்கும் நபர்கள், உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்தால், அவர் எவ்வளவு பெரிய திறமைசாலி என்பதை, புரிந்துக்கொள்வர்.எப்போதும் இளமையாக இருப்பான், இந்த உலகம் சுற்றும் வாலிபன். மறக்காமல் பாருங்கள்!

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - இரு கோடுகள்மறக்க முடியுமா? - இரு கோடுகள் மறக்க முடியுமா? - ராஜ ராஜ சோழன் மறக்க முடியுமா? - ராஜ ராஜ சோழன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

26 ஏப், 2020 - 23:17 Report Abuse
Randy Ranjit super movie. Love you Mgr sir
Rate this:
chennai sivakumar - chennai,இந்தியா
25 ஏப், 2020 - 15:58 Report Abuse
chennai sivakumar Marakka mudiyuma ?
Rate this:
25 ஏப், 2020 - 14:02 Report Abuse
Dharmalingamramu தமிழ் சினமாவிற்கு ஒரு மைல் கல்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in