175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால், தினமும் ஏதாவது ஒரு பதிவு போட்டு வைரலாகிவிடுகிறார். திரையுலகமே முடங்கி இருந்தாலும், அமலா பாலை பற்றி மட்டும் ஏதாவது ஒரு செய்தி தினமும் வெளியாகிவிடுகிறது.
தனது 2ம் திருமணம் குறித்து சூசகமாக பதிவிட்டு பரபரப்பை கிளப்பிய அமலா பால், தற்போது யோகா புகைப்படங்களை வெளியிட்டு அசர வைத்திருக்கிறார். தத்துவார்த்தமான பதிவுகளையே பெரும்பாலும் வெளியிட்டு வந்த அமலா, தற்போது ஒரு கடற்கரையில் தலைகீழாக நின்றபடி யோகா செய்யும் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
"புது நிலவு, புதிய தொடக்கம். விதைகளை விதைப்பது போன்ற உள்ளுணர்வு சொல்லும் விஷயங்களை செய்யும் நேரம் வந்துவிட்டது. பௌர்ணமி நாளில் இது போன்ற சக்திவாய்ந்த விஷயத்தை செய்வதை வழக்கமாக்கியிருக்கிறேன். இதன் மூலம் நான் நினைக்கும் விஷயங்களை செய்ய முடியும்.
பொருள்களை வாங்கி குவிப்பதாலோ அல்லது மேலோட்டமான உறவுகளை வைத்திருப்பதாலோ நமக்கு பாதுகாப்பு ஏற்பட்டுவிடாது. சுயமரியாதை மற்றும் சுயகாதலால் தான் அது கிடைக்கும் ", என வழக்கம் போல் ஞானி ரேஞ்சுக்கு அவர் பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.
தலைகீழாக நின்று யோகா செய்யும் அமலா பாலின் உடற்தகுதியை பார்த்து நெட்டிசன்கள் வியந்துபோய் பாராட்டி வருகின்றனர். நான் கடவுள் படத்தில் வரும் ருத்ரன் (ஆர்யா) மாதிரி அமலா பால் தெரிவதாக அவர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.