Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிவி ரேட்டிங் - 'தர்பார்' தந்த ஏமாற்றம்

24 ஏப், 2020 - 13:48 IST
எழுத்தின் அளவு:
TV-Rating-:-Darbar-disappointment

ரஜினிகாந்த், ஏஆர் முருகதாஸ் கூட்டணியின் உருவான முதல் படமான 'தர்பார்', இந்த ஆண்டு பொங்கல் சமயத்தில் வெளிவந்தது. பெரிய அளவில் வெற்றி பெறாமல் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது.

படம் வெளிவந்த 100 நாட்களுக்குள்ளாகவே தமிழ்ப் புத்தாண்டன்று டிவியில் ஒளிபரப்பினார்கள். உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறை என்பதால் படம் டிவி ரேட்டிங்கில் புதிய சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.

மக்கள் அனைவருமே வீட்டில் இருப்பதால் இதற்கு முன்பு டிவியில் ஒளிபரப்பாகி சாதனை புரிந்து நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'விஸ்வாசம்' டிவி ரேட்டிங்கை (1,81,43,000 தடப் பதிவுகள்) முறியடிக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.

ஆனால், 'தர்பார்' படம் 1,45,93,000 பதிவுகளை மட்டுமே பெற்று, 7வது இடத்தையே பிடிக்க முடிந்தது. முதல் ஆறு இடங்களில் “விஸ்வாசம், பிச்சைக்காரன், சர்க்கார், சீமராஜா, பிகில், நம்ம வீட்டுப் பிள்ளை” ஆகிய படங்கள் உள்ளன.

அது மட்டுமல்ல, 'தர்பார்' ஒளிபரப்பான வாரத்தில் ஒளிபரப்பான 'காஞ்சனா 3' படம், 'தர்பார்' படத்தை விடவும் அதிகமான ரேட்டிங்கை (1,51,84,000) பெற்றுள்ளது. இத்தனைக்கும் 'காஞ்சனா 3' ஏற்கெனவே ஒளிபரப்பான படம்தான்.

தமிழில் ஒளிபரப்பானதற்கு சில நாட்கள் முன்னதாகத்தான் ஹிந்தி, தெலுங்கில் 'தர்பார்' படம் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. அதில் ஹிந்திப் படம் 1,27,31,000 பதிவுகளைப் பெற்று அந்த வாரப் படங்களில் முதலிடத்தைப் பிடித்து சாதனை புரிந்தது.

தெலுங்கிலும், தமிழிலும் எதிர்பார்த்த ரேட்டிங்கைப் பெறாமல் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
டிக்-டாக்கில் 'மாஸ்டர்' புதிய சாதனைடிக்-டாக்கில் 'மாஸ்டர்' புதிய ... சம்பூர்ணேஷ் பாபுவின் நெகிழ வைத்த சேலஞ்ச் சம்பூர்ணேஷ் பாபுவின் நெகிழ வைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Tamil - chennai,இந்தியா
26 ஏப், 2020 - 10:36 Report Abuse
Tamil மேக் போட கொடிக்கணக்கில செலவு செய்தல் போதுமா, எவன் பார்ப்பான்? பணத்தாசை பிடித்த கூத்தாடி சப்பாணியும் பரட்டை நோ 1 கஞ்சனுங்க. இதுல கட்சி வேற. நடிகனாக இருக்கும்வரை வேறு நீ கொடு கொடுக்காமல் போ உன் இஷ்டம்அரசியலில் வந்தால் கண்டிப்பாக செய்யவேண்டும். கொரோனாவுக்கு நிதி கொடுக்க வக்கில்லை சப்பாணி பாட்டு படுவாராம். உனக்கு சம்பளத்துக்கு பதில் தயாரிப்பாளர் ஒரு பாட்டு பாடின வயிறு நிறையுமா? யாருக்கும் நீ ஏதும் செய்யமாட்டாய் சும்மா விளம்பரத்துக்கு 4 தெருவில் செய்துவிட்டு இவங்க விளம்பரம் மட்டும் என்னமோ தமிழ்நாடு முழுவதும் உதவி செய்தது போல காட்டிக்கொள்வது. உங்களுக்கு எல்லாம் எதுக்கு கட்சி??? கோரோனோ நிதி கேட்ட பாட்டு. உன் பாட்டை கேட்டால் அவங்களுக்கு வயிறு நிறைந்துவிடுமா. இவர்கள் இருவரின் கதை வரும் தேர்தலோடு அழிந்துவிடும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in