தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' |
தமிழ் சினிமாவில் இப்போது பிலிம் கேமரா பயன்பாட்டில் இல்லை. எல்லாமே டிஜிட்டல் தான். ஆனாலும் வித்தியாசமான முயற்சியாக தாராளபிரபு படத்தின் இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் சூரரைப்போற்று ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவில் பிலிம் கேமராவில் தயாரான ப்ளாஷ் என்ற இசை ஆல்பத்தில் நடித்திருக்கிறார் அருவி படத்தில் நடித்த அதிதி பாலன்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்ட்ராகிராமில் எழுதியிருப்பதாவது: ஒரு நாள் கிருஷ்ணா எனக்கு போன் செய்து ஒரு பிலிம் கேமரா டெஸ்ட் ஷூட்டில் பங்கேற்க இயலுமா என்று கேட்டார். கேமரா முன்பு நின்று பல நாட்களாகி விட்டது. அதுவும் பிலிம் கேமராவின் முன்னால் நிற்பது அதுவே முதல்முறை. நிச்சயமாக எனக்கு அந்த பரிசோதனை தேவைப்பட்டது. மிகுந்த ஆர்வத்துடன் உடனடியாக சரி என்று சொன்னேன்.
இது வெளியாகும் என்று நினைக்கவே இல்லை. ஆனால் இந்த ஊரடங்கு காலத்தில் இதை வெளியிடுவது சரியாக இருக்கும் என்று தோன்றியது. இது ஒரு வேடிக்கையான ஷூட்டாக மட்டுமே இருக்கப்போகிறது என்று நினைத்தேன். ஆனால் படமாக்கும்போது அவர்கள் பட்ட கஷ்டத்தை பார்த்தேன். ஆனால் அதை விட அவர்களிடம் மகிழ்ச்சி அதிகமாக இருந்தது. இந்த நினைவுகளை வழங்கிய படக்குழுவினருக்கு நன்றி.
இவ்வாறு அதிதி பாலன் கூறியுள்ளார்.