சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
ஹலிதா ஷமீம் இயக்கிய சில்லுக்கருப்பட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்து பெரிய வரவேற்பை பெற்றது. இதற்காக அவர் பல விருதுகளும் பெற்றார். இந்தப் படத்தை ஊரடங்கு காலத்தில் நடிகை சாய்பல்லவி தன் குடும்பத்தினருடன் பார்த்துள்ளார்.
படத்தை பாராட்டி அவர் ஹலீதா ஷமீமுக்கு டுவிட்டரில் அனுப்பி உள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: வணக்கம் ஹலிதா, படம் பார்த்து முடித்ததும் நானும் என் பெற்றோரும் உணர்ச்சி மிகுதியில், மகிழ்ச்சியை உணர்ந்தோம். உங்களுக்காக நான் சந்தோஷப்படுகிறேன். எங்களைச் சந்தோஷப்படுத்தியதற்கு நன்றி. இது போன்ற பல ரத்தினங்களை நீங்கள் உருவாக்க வேண்டும். உங்களுக்கு நிறைய அன்பும், பிரார்த்தனைகளும்.
இதனை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள ஹலீதா ஷமீம், "ஊரடங்கு பெரும்பாலான நேரம் எனக்கு மன அழுத்தத்தைத் தருகிறது. அந்த நேரத்தில் தேவதை எனக்குச் செய்தி அனுப்பினார்" என்று நெகிழ்ந்துள்ளார்.