Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசை விமர்சனம் செய்யும் நேரம் கடந்துவிட்டது - கமல்

24 ஏப், 2020 - 12:19 IST
எழுத்தின் அளவு:
No-time-to--critize-government-says-Kamalhaasan

கமல்ஹாசன் அன்பும் அறிவும் என்ற கொரோனா விழிப்புணர்வை பாடலை வெளியிட்டார். பின்னர் அவர் இணையதளம் வழியாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உலகம் முழுவதிலும் இப்போது கொரோனாவுக்கு எதிரான போர் நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம். இப்போது பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு போதாது. இது மேகம் மாதிரி உடனே கலைந்து போகாது. இது டாக்டர்கள், விஞ்ஞானிகள் கூற்று. மனிதனே மனிதனுக்கு மருந்தாகும் காலம் வெகு விரைவில் வரும்.

அத்தியாவசிய தேவையான போக்குவரத்து, காவல், மருத்துவம் போல் அல்ல சினிமா. 2வது உலகப் போரின்போதே சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டதாம். அப்போது தியேட்டர்கள் குறைவு. இப்போது, நஷ்டத்தில் பல வியாபாரங்கள் உள்ளது. அதில் சினிமாவும் ஒன்று.

தமிழக அரசை விமர்சனம் செய்வதற்கான நேரம் கடந்து விட்டது. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதற்கான நேரம் இது. இவை முடிந்த பிறகு விமர்சனம் செய்வோம். மருத்துவர்களையும், காவலர்களையும் அவமரியாதை செய்தால், அது மனித சரித்திரத்தில் களங்கத்தை ஏற்படுத்தும்.

நம் தலைமுறையில் முதன் முறையாக இதுபோன்ற நோய் தொற்றை பார்க்கிறோம். சீக்கிரம் இதிலிருந்து விடுபடுவோம். இதுபோன்ற நோயில் இருந்து மனிதநேயம், சுகாதாரம் ஆகியவற்றை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்மறையான எண்ணம் வேண்டாம். இனி நமது வியாபார கலாசாரம் மாறப் போகிறது. அணிசாரா தொழிலாளர்கள், சிறு வியாபாரிகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
தஞ்சை பெரிய கோவில் : ஜோதிகா பேச்சுக்கு இயக்குனர் சரவணன் விளக்கம்தஞ்சை பெரிய கோவில் : ஜோதிகா ... மொட்டை அடித்து ஷாக் தந்த நடிகை ஜோதிர்மயி மொட்டை அடித்து ஷாக் தந்த நடிகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

Sundar - Chennai,இந்தியா
01 மே, 2020 - 08:20 Report Abuse
Sundar என்னவோ சொல்ல வந்தது எதையோ சொல்லி எல்லாரையும் குழப்பி என்னோ போ கமல் வெய்யில் கொடும அதிகமா மத்ததெல்லாம் அப்புறமா சரி தூக்கமா
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27 ஏப், 2020 - 04:27 Report Abuse
J.V. Iyer டுயூப் லைட். புதுப்புது கெட்டப்பில் வருவதற்காக புதிய அறிக்கைகளை கொடுக்கிறார் இந்த உலக்கை, உளறல் நாயகன்.
Rate this:
konanki - Chennai,இந்தியா
26 ஏப், 2020 - 21:47 Report Abuse
konanki உளரல் நாயகன்
Rate this:
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
26 ஏப், 2020 - 18:31 Report Abuse
Dr.C.S.Rangarajan அலைகளும் காலமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்றதை உணர்ந்து மக்களுக்கு தெரியாது என அவர் திரட்டிய செய்திகளை பகிர்ந்துகொள்ள முயற்சித்ததுடன், 'ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே'என 'ஞான ஒளி' பிறந்ததை அறிவித்ததை என்னவென்று கூற?.
Rate this:
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
26 ஏப், 2020 - 18:26 Report Abuse
Poongavoor Raghupathy It is difficult to understand whether Kamal is a crack or a crook or both. Neither Kamal understands what he is saying nor others Useless talks without any benefits to the people.
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in