Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் சண்டையை ஆரம்பித்த அஜித் - விஜய் ரசிகர்கள்

23 ஏப், 2020 - 18:52 IST
எழுத்தின் அளவு:
Vijay---Ajith-fans-again-starts-twitter-fight

நடிகர்கள் அஜித்தும், விஜய்யும்(நேரடியாக) டுவிட்டரில் இல்லை. ஆனால் அவர்களது ரசிகர்கள் இல்லாமல் டுவிட்டர் இல்லை. தினம் தினம் ஏதாவது ஒன்றை பிடித்து ஹேஷ்டேக் போட்டு மோதிக்கொள்வதே அவர்களது வேலையாக இருக்கிறது.

இவர்களுடைய இந்த சண்டை மற்ற டுவிட்டர் பயன்பாட்டாளர்களுக்கு எல்லாம் பெரும் சங்கடத்தையே ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் எல்லைமீறி அவர்கள் மோதிக்கொண்டது அனைத்து தரப்பினரையும் முகம் சுளிக்க வைத்தது. பலரது கண்டனங்களுக்கும் ஆளானார்கள்.

இனிமேலாவது திருந்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவர்களது சண்டையை தொடங்கி இருக்கிறார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிதியுதவி அளித்தார். விஜய் நேற்று தான் நிதியுதவியை அறிவித்தார்.

இதுவே தற்போது பிரச்சினைக்கு காரணமாக அமைந்துவிட்டது. #அஜித்தைபின்தொடரும்விஜய் என ஹேஷ்டேக் போட்டு விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றும் வேலையை ஆரம்பித்து இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். பதிலுக்கு விஜய் ரசிகர்களும் கவுண்டர் கொடுத்து வருகிறார்கள். இது எங்கே போய் முடியும் என்றே தெரியவில்லை என நெட்டிசன்கள் கவலைப்படுகின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தென்றலாய் தீண்டும் விவேக்கின் இசை!தென்றலாய் தீண்டும் விவேக்கின் இசை! நடிகைகளை ஆட்டிப்படைக்கும் சவால்கள் நடிகைகளை ஆட்டிப்படைக்கும் சவால்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Rajarajan - Thanjavur,இந்தியா
23 ஏப், 2020 - 21:00 Report Abuse
Rajarajan இந்த கேடுகெட்ட ரசிகர்கள் இருக்கும்வரை, இந்த நடிகர்ளுக்கு கொண்டாட்டம் தான். எப்போதாவது இவர்கள் வாய் திறந்து, தங்கள் ரசிகர்களை படியுங்கள், வாழ்க்கையில் முன்னேறுங்கள், எங்கள் நடிப்பை ரசிக்க மட்டும் செய்யுங்கள், நாங்கள் சாதாரண மனிதர்கள் தான், புத்திசாலியா / அறிவாளியா என்றால் இல்லை, எங்களை நம்பி வாழ்க்கையை தொலைத்துக்கொள்ளாதீர்கள், நாங்கள் வெறும் பொழுது போக்கிகள் தான், உங்களைவிட பல தலைமுறைக்கு சொத்து சேர்த்துவிட்டோம், உங்கள் குடும்பத்தை / வாரிசுகளை / முன்னேற்றத்தை / வாழ்க்கையை பாருங்கள் என்று எப்போதேனும் கூறியதுண்டா ?? இந்த லட்சணத்தில், இவர்கள் நாட்டை ஆட்சி செய்தால், அதோகதி தான். ஆனானப்பட்ட, பொருளாதார மேதைகள் விழி பிதுங்கி நிற்கின்றனர். இந்த அழகால், இந்த நடிகர்களை நம்பி, அவர்கள் பின்னால் போகும், இந்த ரசிக கூட்டத்தினரை, பெற்றவரின் வயிற்றில் பிரண்டையை வைத்து தான் கட்டவேண்டும்.
Rate this:
Siva - Aruvankadu,இந்தியா
23 ஏப், 2020 - 20:00 Report Abuse
Siva ஊரடங்கு முடிந்ததும் வடநாட்டு தொழிலாளிகள் சொந்த ஊர் செல்லலாம்.. ஆகவே நிறைய வேலைவாய்ப்பு உள்ளது.. இனிமேலாவது உழைத்து வாழ பழகி கொள்ள ஆண்டவன் அருள் புரிய வேண்டுகிறேன்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in