நண்பன் பட வெற்றியை கொண்டாடிய துல்கர் சல்மான் | உதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் | மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர் | பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை | ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் | மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர் | வக்கீல்சாப் : பவன்கல்யாண் நடிப்பை பாராட்டிய மகேஷ்பாபு | விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம் | ரெண்டகம் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ் |
கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் சின்ன பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஹெலன்'.. பிரபல நடிகர் வினீத் சீனிவாசன் தயாரித்திருந்த இந்தப்படத்தை மாத்துக்குட்டி சேவியர் என்பவர் இயக்கி இருந்தார். அன்னா பென் என்பவர் கதாநாயகியாக நடித்திருந்த இந்தப்படம் ஷாபிங் மாலில், ஒரு குளிரூட்டும் அறையில் இரவு முழுதும் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருந்தது. அந்தப்படத்தின் நாயகி அன்னா பென்னை இந்தப்படம் ரசிகர்களிடம் பிரபலமும் ஆக்கியது.
அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் விதமான கதையம்சம் கொண்ட இந்த படத்தை தமிழில் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்க, இயக்குனர் கோகுல் இயக்கவுள்ளார். இந்தநிலையில் இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை ஹனுமான் சவுத்ரி என்பவர் இயக்கவுள்ளார். கீர்த்தி பாண்டியனுக்கும் அனுபமாவுக்கும் இந்தப்படத்தில் நடிக்கும்போது ஏகப்பட்ட சவால்கள் காத்திருக்கின்றன என்பது ஹெலன் படம் பார்த்த ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.