சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
கொரானோ ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். பெரும்பாலான நேரத்தை டிவியில் திரைப்படங்கள் பார்ப்பது, ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் பார்ப்பது என பலர் கழித்து வருகிறார்கள். ஏற்கெனவே பல முறை ஒளிபரப்பான படங்களை தற்போது ஒளிபரப்பினாலும் அவற்றையும் மக்கள் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்று ஒரு டிவியில் மோகன்ராஜா இயக்கத்தில் அவரது தம்பி ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த 'தனி ஒருவன்' படத்தை ஒளிபரப்பினார்கள். அப்போது மோகன் ராஜா டுவிட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார்.
அதில், “சில நிமிடங்கள் முன் என் மகள் என்னிடம், “அப்பா, இப்போது டிவியில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் தனி ஒருவனையும் சேர்த்து நீங்கள் இயக்கிய 8 படங்கள் (ஜெயம், எம் குமரன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி, வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன்) மற்றும் சித்தப்பா நடித்த 'நிமிர்ந்து நில், பூலோகம், அடங்க மறு, வனமகன், கோமாளி' படங்கள் லாக்டவுன் காலத்தில் 25 நாட்களில் 18 முறைக்கும் மேல் ஒளிபரப்பி விட்டார்கள்,“ என்று தான் குறித்து வைத்ததை காண்பித்து உற்சாகம் பகிர்ந்தாள்.
இந்த லாக்டவுன் என்கிற கடின நாட்களில், எடுத்த படங்கள் மூலம் உங்கள் குடும்பங்களை தொடர்பு கொள்ள முடிந்ததை நினைக்கும் அதே நேரத்தில், சினிமாவில் அளவற்ற ஆசையோடு உலகத்தையே உலுக்கிவிட வேண்டும் என்று நான் ஆகாயத்தில் கோட்டை கட்டிய பக்குவமற்ற வயதில், குரு என்கிற அதிகாரத்தோடு என் தந்தை என் தலை மீது குட்டு வைத்து ஆடியன்தஸ் தான் நம்ம கடவுள், அவங்கள திருப்தி பண்ற படங்களை மட்டுமே எடு என்கிற மந்திரத்தை தலையில் அன்றே ஏற்றியதே நினைவுக்கு வருகிறது. இந்த நொடியிலும் மாடியில் தன் மகன்கள் எடுத்த படத்தை பூரிப்போடு பார்த்து கொண்டிருக்கும் தந்தைக்கு என்றும் போல் இன்றும் நன்றியுணர்வோடு நான்,” என தன் படங்களில் பங்கேற்ற அத்தனை பேருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள ஜெயம் ரவி, “இந்த அற்புதமான பயணத்தில் உங்களுடன் பயணிப்பது ஆசீர்வாதம் அண்ணா,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊரடங்கு காலத்தில் மோகன்ராஜாவின் பல படங்களும், ஜெயம் ரவியின் சில முக்கிய படங்களும் டிவிக்களில் ஒளிபரப்பாகி இருப்பது அவர்களுக்குப் பெருமைதானே.