Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீப்பெட்டி கணேசன் குடும்பத்துக்கு உதவிய சினேகன்

23 ஏப், 2020 - 11:48 IST
எழுத்தின் அளவு:
Lyricist-Snehan-helps-to-actor-Theepatti-ganesan

ரேணிகுண்டா படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்த மாற்றுத் திறனாளி நடிகர் தீப்பெட்டி கணேசன். தற்போது கொரோனாவால் சினிமா வாய்ப்பு இல்லாமல் இரண்டு குழந்தைகளுடன் வறுமையில் தவிப்பதாகவும், கொரேனா ஊரடங்கு காலத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருப்பதாக கண்ணீர் மல்க ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அவருக்கு நடிகர் விஷால் மளிகை சமான்கள் வாங்கிக் கொடுத்தார். நடிகர் லாரன்ஸ் உதவி உள்ளார். இப்போது பாடலாசிரியர் சினேகன் அவரது வீட்டுக்கு சென்று மளிகை சாமான்கள் வாங்கிக் கொடுத்திருப்பதுடன் குழந்தைகளின் ஒரு வருட படிப்பு செலவை ஏற்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: தன் குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட வசதியில்லை என கண்ணீர் மல்க ஒரு பதிவினை வலைத்தளத்தில் நடிகர் தீப்பெட்டி கணேசன் மனம் உருக பதிவிட்டு இருந்தார். அவரை சந்தித்து எனது சினேகம் செயலகம் என்ற அறக்கட்டளையின் சார்பில் இரண்டு வாரத்திற்கான அனைத்து உணவுப்பொருட்களை வழங்கியதோடு அவரின் இரண்டு குழந்தைகளின் இந்த வருட கல்விச்செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்ற நம்பிக்கையைத் தந்துவிட்டு வந்தேன். இதுபோல பல கலைஞர்களுக்கு பல உதவிகள் இந்த தருணத்தில் தேவைப்படுகிறது. மனம் உள்ளவர்களும் பணம் உள்ளவர்களும் உதவ முன்வாருங்கள்.

இவ்வாறு சினேகன் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா ஊரடங்கில் தயாரான செல்போன் படம்கொரோனா ஊரடங்கில் தயாரான செல்போன் ... அறிவும் அன்பும்... கமலின் கொரோனா பாடல் வெளியீடு அறிவும் அன்பும்... கமலின் கொரோனா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

யார்மனிதன் - Toronto,கனடா
24 ஏப், 2020 - 20:39 Report Abuse
யார்மனிதன் அந்தப்பொண்ண கட்டிபுடுச்சிய? என்ன கட்டிபுடிச்சய்ய?? கொடுத்துட்டு எதுக்குங்க போஸ்டர் அடுச்சு ஓட்டணும்??அவரையும் அவர் குடுப்பத்தையும் சங்கட படுத்தது ??
Rate this:
KayD - Mississauga,கனடா
23 ஏப், 2020 - 17:34 Report Abuse
KayD udhavi pannadhu great . Much appreciate it Snegan.. theepetti veetil ippo adupu erika udhavum. sema ponga neenga Oru question: சினேகன் இந்த time la eppadi familyoda Ganesan veetuku ponaar.. ivarai police adikalayaa. viartti viartti thorathi thorathi polakalaya..ivar thaan snegan aachae namba police thaan ungal nanban aachae ..kooti kazhichu paatha kanaku sariya thaan iruku
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
25 ஏப், 2020 - 12:51Report Abuse
Sanny கனடாவில் இருந்து Doll வாங்கி இந்திய ஏழைகளை கிண்டல் பண்ணும் மனிதரை இப்போதான் பார்க்கிறோம், ஒருவருக்கு உதவிக்குப்போகும்போது போலீஸ் அவர்களுக்கு வழிவிட்டுக்கொடுக்கும், ஊர் சுற்ற போவனுக்குத்தான் வெரட்டி, வெரட்டி முடிவிலும், கருணை உள்ள போலீஸ் தான் உங்களைப் போன்றவர்கள் அல்ல....
Rate this:
GNANAM - THENI,பூடான்
23 ஏப், 2020 - 12:47 Report Abuse
GNANAM மாற்றுத்திறனாளியா அஜித் ரசிகர்கள் உதவலாம் .அஜித் உதவியை எதிர்பார்க்கிறார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in