12 நாட்களில் 100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் டான் | விஜய்யின் 68வது படத்தை இயக்கும் அட்லி | கஞ்சா பூ கண்ணாலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு | ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‛1947 ஆகஸ்ட் 16' | ராம்கோபால் வர்மா மீது பணமோசடி புகார் | கேஜிஎப் படத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | மோகன்லால் மீதான யானை தந்தம் வழக்கு: 3 வாரத்தில் விசாரணையை முடிக்க கோர்ட் உத்தரவு | ஆட்டோவில் சென்ற நடிகையிடம் அத்துமீறிய போலீஸ் | ராம் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் | சேகர் படத்தின் தடை நீக்கம் ; மறு ரிலீஸ் தேதி பரிசீலனை |
தஞ்சை பெரிய கோவிலைப் பற்றி நடிகை ஜோதிகா பேசிய பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்தவர் நடிகை ஜோதிகா. திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த இவர், 36வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். சமீபத்தில் ராட்சசி படத்திற்காக தனியார் நடத்திய விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். இந்நிகழ்ச்சி கடந்த மாதம் நடந்தது. இதன் ஒளிபரப்பு சமீபத்தில் தனியார் டிவியில் ஒளிபரப்பானது. அதில் ஜோதிகா பேசிய பேச்சு தற்போது பலரது கண்டனங்களை பெற்றுத் தந்துள்ளது.
ஜோதிகா பேசியதாவது: தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் மிகவும் அழகானது. உதய்பூர் அரண்மனை போல் அழகாக இருக்கும். இதற்கு முன் நான் பார்த்துள்ளேன். அங்கு போகாமல் இருக்காதீர்கள் என சிலர் கூறினர். ஆனால், கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்படவில்லை. இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. கோவிலுக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு தரும் கவனம், உண்டியலில் போடும் பணத்தை போல் பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கும் கொடுங்கள். அந்த மருத்துவமனையை பார்த்து விட்டு என்னால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என பேசி உள்ளார்.
ஜோதிகாவின் இந்த கருத்துக்கு ஹிந்து மதத்தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‛மேற்கோள்காட்ட கோவில் தான் கிடைத்ததா? சர்ச், மசூதி போன்றவை கண்ணுக்கு தெரியவில்லையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து ஹிந்து மத அமைப்பை சார்ந்தவர்கள் கூறியதாவது: ஹிந்து கலாச்சாரத்தின் அடையாளமான தஞ்சை பெரிய கோவிலை இழிவுப்படுத்தும் வகையில் பேசியது தவறு. மருத்துவமனை கட்டுவது என்ற கோரிக்கை நியாயமானது. ஆனால் அதற்கு நடிகை ஜோதிகா சொன்ன உதாரணம் தவறு. கட்டாயம் அவர் இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
திரைத்துறையில் பிரபலமாகி விட்டால் எதையாவது பேச வேண்டும்; என்பதற்காக தேவையற்ற சர்ச்சை கருத்துக்களை பேசி வருவது என்பது சமீபத்திய நிகழ்வாக இருக்கிறது. ஹிந்துகளின் நம்பிக்கை அடையாளத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் ஹிந்து கோவில்களை மட்டும் உதாரணப் படுத்தக்கூடிய நடிகை ஜோதிகா இஸ்லாமிய, கிறிஸ்துவ மதத்தவர்களின் வழிபாட்டுத் தலங்களை பற்றி பேசாமல், தஞ்சை கோவிலை மட்டும் சொன்னது ஹிந்து மத அவமதிப்பு. தேவையற்ற மத ஒப்பீட்டு வாதத்தை உருவாக்கியிருக்கிறது.
மக்கள் மீதும் மாணவர்கள் மீது இவ்வளவு அக்கறை இருக்குமேயானால் தனது கணவர் சூர்யா நடிக்கும் சினிமாவை இவ்வளவு பணம் கொடுத்து யாரும் பார்க்க வேண்டாம் என்று சொல்ல தைரியம் உண்டா? தமிழர் கலைப் பண்பாடு, தமிழர் கட்டிடகலை அடையாளத்தை கொச்சைப்படுத்தி பேசியதற்கு தமிழ் சமூகத்திடம் ஜோதிகா மன்னிப்பு கேட்க வேண்டும்
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எஸ்.வி.சேகர் கண்டனம்
ஜோதிகாவின் பேச்சு 100 சதவீதம் முதிர்ச்சியற்றது. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று. இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல், நல்ல பள்ளிகள் அவசியம். கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம். Ask Ur FATHER IN LAW என டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகர் எஸ்.வி.சேகர்.