யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் | 68 வயதில் இயக்குனராக மாறிய வில்லன் நடிகர் | குட்டையான உடை அணிந்து குத்தாட்டம் போட்ட ஸ்ரீநீதி! | 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் அசத்திய தமிழ் திரைப்படம் |
ரேணிகுண்டா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் தீப்பெட்டி கணேசன்.. சில வருடங்களுக்கு முன் அஜித்துடன் பில்லா- 2 படத்தில் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவரது ஒரிஜினல் பெயர் கார்த்திக் என்றாலும் எல்லோருமே தீப்பெட்டி கணேசன் என்று அழைத்தே பழக்கப்பட்டு விட்டனர். ஆனால் அஜித் இவரின் நிஜப்பெயரை தெரிந்து கொண்டு, இவரை ஒவ்வொருமுறையும் கார்த்தி என்றே அழைத்தாராம். அஜித் அப்படி அழைப்பர் என எதிர்பார்க்காத தீப்பெட்டி கணேசன் அஜித் அளித்த மரியாதையை கண்டு நெகிழ்ந்து விட்டாராம். இதையெல்லாம் ஒரு பேட்டியில் கூறி உள்ளார் தீப்பெட்டி கணேசன்.
மேலும், “தற்போது இந்த ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் வாடுகிறோம்.. என் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. எப்படியாவது அஜித்திற்கு தகவல் தெரிந்தால் போதும், நிச்சயம் எனக்கு உதவுவார்.. ஆனால் அவருக்கு எங்களை போன்றவர்களின் நிலையை கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் எல்லோரும் தங்களது தேவைகளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்” என கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.