அனைத்து ஹீரோ படங்களும் வெளியாகும் ஆண்டாக 2022 அமையுமா? | விமான நிலையத்தில் பூஜா ஹெக்டேவிற்கு இன்ப அதிர்ச்சி | மகாபலிபுரத்துக்கு சுற்றுலா சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன் | கிண்டல் செய்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தந்த அமீர்கானின் மகள் | மனைவியின் ஓராண்டு நினைவு தினம் : அருண்ராஜா காமராஜ் உருக்கம் | கேஜிஎப் 2வால் ஷங்கருக்கு ஏற்பட்ட பெரியப்பா அனுபவம் | விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்தை நெருங்கும் சிவகார்த்திகேயன்? | தனுஷின் தயாரிப்பு நிறுவன யு-டியூப் பக்கம் முடக்கம் | 'சலார்' - பிரமோஷன் வேலைகள் இனிதே ஆரம்பம் | செளந்தர்யாவிடம் மட்டும் தான் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் - விக்னேஷ் கார்த்திக் |
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஒரு மாதமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் வசதி படைத்தவர்கள் தாங்கள் சார்ந்த தொழில்துறையை சேர்ந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.. அந்த வகையில் முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த சமயத்திலேயே பெப்சி அமைப்பை சேர்ந்த தொழிலாளர்களின் உணவுத்தேவைக்காக அதன் தலைவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி திரைரையுலக முன்னணி நட்சத்திரங்களிடம் நிதி உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தார்.
அந்தவிதமாக முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் என பலரும் தங்களது வசதிக்கு ஏற்ப நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்தநிலையில் இயக்குனர் பாண்டிராஜ், பெப்சி அமைப்பை சேர்ந்த தொழிலாளர்களுக்காக ரூ 2 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். இரண்டாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள இந்த சமயத்தில் முன்னைப்போல் இப்போதும் அதே அளவு உதவி தேவைப்படுகின்றது என்பதால் இதுவரை உதவிக்கரம் நீட்டாத திரையுலகை சேர்ந்த வசதி படைத்தவர்கள் அனைவரும் உதவி செய்ய முன் வர வேண்டும் என்றே தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்..