முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
கொரோனா தொற்று பாதிப்பால் மரணமடைந்த மருத்துவர் ஒருவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் ஒரு சிலர் அடிதடி ரகளையில் இறங்கியதும், வாகனங்களை சேதப்படுத்தியதும் தமிழகமெங்கும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனவுக்கு எதிராக போராடி நம் உயிர்காக்க முயற்சிக்கும் மருத்துவர்களுக்கே இந்த கதியா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில் மனிதம் வளரனும் என இந்த சம்பவம் குறித்து தனது வேதனையை வெளிபடுத்தியுள்ளார் நடிகரும், இயக்குனருமான சசிகுமார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, :கடந்த ஒன்றரை மாத காலமாக கொரோனா வைரஸ் என்கிற கொடிய நோய்க்கு எதிராக போராடும் மருத்துவர்கள், நம்மை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு அவர்கள் வெளியில் இறங்கி போராடி வருகிறார்கள்.. ஆனால் இப்ப கேள்விப்படுற சம்பவங்கள் ரொம்ப வருத்தபட வைக்கிறது, நம் உயிரை காப்பாற்றியவர்களையும் சரி, காப்பாற்றிகொண்டு இருப்பவர்களையும் சரி நாமதான் மதிக்கணும். இந்தமாதிரி சம்பவங்கள் இனி நடக்க கூடாது.. நம்மை பாதுகாக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், போலீஸார் இவர்களை நாம் தான் பாதுகாக்கணும்.. அவங்களுக்கு ஆதரவா இருக்கணும்.. அதுதான் மனிதம்.. மனிதம் வளரணும்” என வருத்தம் கலந்த கோரிக்கையை விடுத்துள்ளார் சசிகுமார்.