Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில் வாழ்கிறோம் - ராஜ்கிரண் கண்டனம்

21 ஏப், 2020 - 13:51 IST
எழுத்தின் அளவு:
Rajkirans-angry-statement-in-Facebook

கொரோனாவால் நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது அவர்களுக்காக சேவை செய்து வருகின்றனர் மருத்துவர்கள், செவிலியர்கள். இந்நிலையில் கொரோனா நோய் தாக்கி டாக்டர் ஒருவர் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் பொது மக்கள் சிலர் தடுத்தனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் பேஸ்புக்கில், “எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது, மிகுந்த வேதனையும் மன உளைச்சலும் ஏற்படுகிறது. தம் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர் யாரைப் பற்றியும் கவலைப்படாமல், "தான் படித்தது மக்களை காப்பாற்றுவதற்கே" என்ற ஒரே லட்சியத்தோடு, சமூகப் பொறுப்புணர்வோடு, தம் உயிரையும் பணயம் வைக்கும் புனிதமான மருத்துவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இதுதான் என்றால், இஸ்லாமியனாக பிறந்த ஒரே காரணத்தால், வெறும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனின் உடலை, புதைக்க விடமாட்டோம் என்று அடாவடி பண்ணிய அரசியல் கட்சிகள் வைத்தது தான், இந்த நாட்டில் சட்டம், என்றால், உலக நாடுகளின் பார்வையில், நம் நாடும், தேசமும் மிகக்கேவலப்பட்டு நிற்கும். இதைப்போன்ற கொடுமைகளுக்கு கடுமையான எதிர் நடவடிக்கைகள் எடுக்காத ஆட்சியாளார்கள், மிகவும் ஈனப்பிறவிகளாக கருதப்படுவர்...”

இவ்வாறு காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (60) கருத்தைப் பதிவு செய்ய
எனக்கு எப்போதும் பிடித்த நடிகர் விஜய் : இலங்கைப் பிரதமரின் மகன்எனக்கு எப்போதும் பிடித்த நடிகர் ... ரேஸ் பைக் : அசத்திய மாளவிகா மோகனன் ரேஸ் பைக் : அசத்திய மாளவிகா மோகனன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (60)

Jayvee - chennai,இந்தியா
27 ஏப், 2020 - 22:49 Report Abuse
Jayvee உங்க தப்லிக் கூட்டம் அராஜகம் செய்து அது உங்க கண்ணனுக்கு தெரியலையா .. இல்ல தெரியத்தமாதிரி நடிக்கிறீங்களா ?
Rate this:
s t rajan - chennai,இந்தியா
27 ஏப், 2020 - 05:01 Report Abuse
s t rajan மக்கள் மருத்துவரின் இறுதிச் சடங்கில் இடையூறு விளைவித்தது மன்னிக்க முடியாத குற்றம் என்றால், அரசு அறிவித்த 50 வட்சம் உதவித் தொகை கொராணவால் இறந்த இரண்டு டாக்டர்களுக்கும் பாரபட்சமின்றி கொடுக்கப் படவேண்டும். அதாவது இறந்த மற்றொரு டாக்டர் ஜெயமோகன் குடும்பத்திற்கும் உதவித் தொகை வழங்கப்பட்டதை அரசு உறுதி செய்யவேண்டும்.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
25 ஏப், 2020 - 11:19 Report Abuse
Darmavan ஒழுக்கம் கெட்ட கூத்தாடிகள் போதனை செய்கின்றன
Rate this:
Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) கீழ்த்தரமான சினிமாக்காரர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்வது ரொம்ப கேவலமாகத்தான் இருக்கு...
Rate this:
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
22 ஏப், 2020 - 18:29 Report Abuse
Rasheel வெளி நாட்டில் இருந்து வரும் பல ஆயிரம் கோடி - சட்ட விரோத நிதி. வரலாறு காணாத காஷ்மீர் வெள்ளத்தில் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ராணுவ வீரர்களை வெடிகுண்டு வைத்து கொன்ற கூட்டம் அது. இன்று டாக்டர், செவிலியர்களையும் கல்லால் தாக்கியும் எச்சில் துப்பியும் செய்யும் கூட்டம். இங்கே வந்து கருத்து வேற மத வெறி காரணமாக சட்டத்தை மதிக்காததும், வெளிநாட்டுக்காரனை சட்ட விரோதமாக பாதுகாத்து வைத்து இருப்பதும், டாக்டர்களை செவிலியர்களை தாக்குவதும் தொற்று பரவ மிக பெரிய காரணமாக உள்ளது. இதனால் இவர்களை பார்த்தாலே ஓடும் நிலைக்கு உள்ளது. நோய் என்பதை அறிவியல் பூர்வமாக பார்க்க வேண்டும். மத கண்ணோட்டத்தோடு பார்த்தால் அழிவை சந்திக்க வேண்டும் நன்றி இல்லாத மனிதரை விட நாய்கள் மேலடா சமூகத்தோடு இணைந்து வாழுங்கள். காவல்துறை, மருத்துவர்கள், செவிலியர்களை மரியாதையுடன் நடத்துங்கள். இல்லாவிட்டால் அந்த ஓரிறை மன்னிக்க மாட்டான்
Rate this:
மேலும் 55 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in