'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
1995ல் மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான மஞ்சுவாரியர், இதுவரை கிட்டத்தட்ட 50 படங்கள் வரை நடித்துள்ளார். திருமணத்திற்கு முன்பாகட்டும், அல்லது தற்போதைய செகன்ட் இன்னிங்ஸ் ஆகட்டும், இத்தனை வருடங்களில் மலையாள சினிமாவில் உள்ள அனைத்து பிரபல ஹீரோக்களுடனும் இணைந்து நடித்துவிட்ட இவர், மம்முட்டி படத்தில் மட்டும் நடித்ததே இல்லை.. அதற்கான வாய்ப்பு அவருக்கு அமையவில்லை என்று சொல்வதைவிட, மஞ்சு வாரியர் தனது படத்தில் நடிப்பதை மம்முட்டி விரும்பவில்லை என்றே மலையாள திரையுலகில் சொல்லப்பட்டு வந்தது..
காரணம் நடிகர் திலீப்பை செல்லப்பிள்ளையாக பாவித்து வந்த மம்முட்டி, ஏனோ அவரது மனைவியான மஞ்சு வாரியருடன் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தார் என்றும் சொல்லப்பட்டது. இந்தநிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது அறிமுக இயக்குனர் ஜோபின் டி சாக்கோ என்பவர் இயக்கும் 'தி பிரைஸ்ட்' என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார் மஞ்சு வாரியர். திரில்லர் படமாக உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி நிறைவடைந்து விட்டது.
இந்தப்படத்தில் மம்முட்டி-மஞ்சு வாரியர் இருவரும் இணைந்து நடிக்கும் முதல்நாள் காட்சியை படமாக்கும்போது தான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என கூறுகிறார் இயக்குனர் ஜோபின் டி சாக்கோ.. மம்முட்டி-மஞ்சு வாரியர் இருவருக்கும் கூட தாங்கள் இத்தனை வருடங்கள் கழித்து இணைந்து நடிக்கப் போகிறோம் என்கிற சந்தோசம் இருந்தை கண்கூடாக பார்க்க முடிந்தது என்றும் கூறியுள்ள அவர், முன்னணி இயக்குனர்களுக்கு கூட இதுநாள் வரை கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.