முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களை வீட்டினுள் இருக்கும்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் சிலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் காவல்துறைக்கு இடையூறு தரும் வகையில் ரோடுகளில் சுற்றி திரிகின்றனர்.
இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் நேற்று கொரோனா தடுப்புக்காக மதுரை காவல்துறையுடன் ஒரு நாள் தன்னார்வலராக பணியாற்றியுள்ளார். ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் திரியும் மக்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பெண் போலீஸ் உட்பட போலீசார் படும் சிரமங்களையும் மக்களுக்கு வீடியோ வாயிலாக எடுத்துரைத்தார். "நாம் நலமாக இருக்க இவர்கள் வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. அதை புரிந்து கொண்டு நாம தான் ஒத்துழைக்கணும்” என வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
பைக்கில் வந்த நண்பர்களையும், காதலர்களையும் வழிமறித்து, "உங்க அன்பு எனக்கு புரியது. இப்போ நிலைமை சரியில்லை, சேர்ந்து சுத்தாதீங்க, நிலைமை சரியானதும் நல்லா சுத்துங்க" என்று கூறி அனுப்பி வைத்தார். களத்தில் இறங்கி பணியாற்றிய சசிகுமாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.