Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதை திருட்டு விவகாரம் : ஆன்லைனில் இருந்து நீக்கப்பட்ட ஹீரோ

18 ஏப், 2020 - 18:49 IST
எழுத்தின் அளவு:
Hero-movie-removed-from-OTT-Platform

சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ஹீரோ. மித்ரன் இயக்கியிருந்தார். இப்படத்தின் கதை என்னுடைய என இயக்குனர் போஸ்கோ பிரபு என்பவர் நீதிமன்றத்தில் கதைத் திருட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் கடந்த 10.-03.-2020 அன்று, வேறு மொழிகளில் வெளியிட இப்படத்தை இடைக்காலத்தடை விதித்தும். மொழிமாற்றம் [டப்பிங்] மற்றும் சாட்டிலைட் உரிமைகளுக்கும் இடைக்கால தடை விதித்தும் ஐகோர்ட் உத்தரவிட்டது.

ஆனால், தடையையும் மீறி தெலுங்கில் சக்தி என்ற பெயரில் ஹீரோ படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு மார்ச் 20-ம் தேதி தெலுங்குத் திரையுலகில் வெளியாக உள்ளதாக விளம்பரங்கள் செய்யப்பட்டது. ஆனால் ஊரடங்கு உத்தரவால் வெளியாகவில்லை. இதையடுத்து கடந்த மாதம் இறுதியில் அமேசான் பிரைம் என்ற இணையதளத்தில் ஹீரோ மற்றும் தெலுங்கில் உருவாக்கப்பட்ட சக்தி திரைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டது.




இதுகுறித்து இயக்குனர் போஸ்கோ கூறும்போது, ”ஹீரோ” திரைப்படம் எந்த ஒரு வேற்று மொழியிலும் எந்த வகையிலும் வெளியிடுவதற்கும் மற்றும் ஹீரோ திரைப்படத்தை டிஜிட்டல், இணையதளம் மற்றும் சாட்லைட் தொலைக்காட்சி என எதிலும் வெளியாவதற்கு சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடைவிதித்துள்ள நிலையில், திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியானது. இதையடுத்து அமேசான் பிரைமுக்கு இமெயில் மூலம் நீதிமன்றத்தின் நகலை அனுப்பினேன். இதைப் பார்த்த அவர்கள் ஆன்லைனில் இருந்து படத்தை நீக்கிவிட்டார்கள். விரைவில் நீதிமன்றத்தில் இருந்து நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நியாயம் கேட்கும் கமல்நியாயம் கேட்கும் கமல் நலமுடன் வீடு திரும்பினார் மனோரமா மகன் நலமுடன் வீடு திரும்பினார் மனோரமா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Selvaraj Chinniah - sivagangai,இந்தியா
20 ஏப், 2020 - 15:54 Report Abuse
Selvaraj Chinniah இந்த கதை இவருடையதுதான் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?
Rate this:
prasath -  ( Posted via: Dinamalar Android App )
19 ஏப், 2020 - 06:07 Report Abuse
prasath ஒழுங்கா தனுஷ் கூட சேர்துந்து கொள், பிரச்சனை பண்ணிக்காத, இல்லனா field அவுட் ஆயிடுவ. அவன் கண்டிப்பா உன் குடும்பத்தை நடு தெருவுல நிறுத்துவான்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in