Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இருட்டு அறையில் முரட்டு குத்து 2-ல் நடிக்காதது ஏன்: யாஷிகா விளக்கம்

17 ஏப், 2020 - 19:02 IST
எழுத்தின் அளவு:
Yashika-replied-why-she-did-not-act-in-Iruttu-Arayil-murattu-kuthu-2

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், வைபவி சாந்தில்யா, யாஷிகா ஆனந்த், ஷாரா சிவா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. முழுக்க முழுக்க டபுள் மீனிங் வசனங்களுடன், செக்ஸ் காமெடி படமாக வெளிவந்த இந்த படம் வசூலை அள்ளிக்குவித்தது.

இப்படத்தில் 2வது ஹீரோயினாக நடித்ததன் மூலம் யாஷிகா ஆனந்தின் திரைப்பயணத்தில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. அனைவராலும் கவனிக்கப்பட ஆரம்பித்தவருக்கு, பிக்பாஸ் சீசன் 2ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் மேலும் பிரபலமானவர் பிஸியான நடிகையாகிவிட்டார்.

சந்தோஷ் பி.ஜெயக்குமார் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் டேனி ஆனி போப், ஷாலு ஷம்மு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பேங்காக்கில் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டா லைவ்வில் பேசிய யாஷிகாவிடம் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் நடிக்காதது ஏன் என ரசிகர்கள் கேட்டனர். அதற்கு அவர், "இருட்டு அறையில் முரட்டு குத்து படம் தான் என் சினிமா கேரியரை மாற்றியமைத்தது. அதன் 2ம் பாகத்தில் நடிக்க என்னை அணுகினர். ஆனால் நான் ஏற்கனவே வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருந்ததால் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அது எனக்கு வருத்தம் தான்", என்றார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
அந்தாதூன் தமிழ் ரீ-மேக் - தபு நடிக்க மறுப்பா?அந்தாதூன் தமிழ் ரீ-மேக் - தபு நடிக்க ... டிக்டாக் பெண்ணுக்கு சினிமா வாய்ப்பு : ராம்கோபால் வர்மா திடீர் பல்டி டிக்டாக் பெண்ணுக்கு சினிமா வாய்ப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

karutthu - nainital,இந்தியா
19 ஏப், 2020 - 16:31 Report Abuse
karutthu அதான் இவ டிரஸ் லேயே தெரியுதே அப்புறம் என்ன ?
Rate this:
maruthu pandi - Oru peru vendaam nanbaa,இந்தியா
19 ஏப், 2020 - 10:11 Report Abuse
maruthu pandi கலாச்சாரம் என்ற பேரில் இன்னும் நாம் டூரிங் தியேட்டர் இரவு காட்சிகளை ஒளிவு மறைவாக பார்பவர்களாக வே இருக்கிறோம் . சுஜாதா ஒரு முறை எழுதியிருந்தார் பிரான்ஸ் நாட்டில் ஒரு முறை தியேட்டர் இல் அந்த மாதிரி படத்தை பார்க்க நேர்ந்ததாகவும் தான் சிறிதும் அதில் ஆபாசத்தை உணரவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.. ஆனால் சென்னையில் ஒருமுறை ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனபோது தன படுக்கைக்கு முன்னாள் இருந்த டிவி யில் நாள் முழுவதும் நம்ம ஊர் சினிமா பாடல் காட்சிகளை ஒலியின்றி ( மியூட் ) காண நேர்ந்ததாகவும் அப்போது நமது நடிகைகளின் அசைவுகள் ஆபாசத்தின் உச்சமாக இருந்ததாக உணர்ந்ததாகவும் எழுதி இருந்தார். இரட்டை "ஏ " செர்டிபிகேட்டுகளுடன் நமது சினிமாக்காரர்கள் வெளிப்படையான காட்சிகளை எடுக்க நேர்ந்தால் இது போன்ற நியூஸ் நாம் படிக்க மாட்டோம் .
Rate this:
swa -  ( Posted via: Dinamalar Android App )
18 ஏப், 2020 - 08:48 Report Abuse
swa ........ padam
Rate this:
Anbu - Kolkata,இந்தியா
18 ஏப், 2020 - 16:16Report Abuse
Anbuவீட்டுத் தலைகாணியில இருக்குற பஞ்செல்லாம் பறந்துடப் போவுது .........
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
19 ஏப், 2020 - 06:01Report Abuse
 Muruga Velஉங்க தலையும் தேன்கூட்டில் இருந்த மாதிரி தெரியுதே .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in