800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் | பாபி சிம்ஹாவை புறக்கணித்த தமிழ் ஹீரோக்கள் | எனக்கு ஜாதி பிடிக்காது : மேனனை உதறித் தள்ளிய சம்யுக்தா | 92வது வருடத்தில் தெலுங்கு சினிமா | 3வது முறை கிராமி விருது வென்று அசத்திய இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் | போட்டியாக இருந்த சீரியலுக்கே ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சிபு சூரியன் | ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி | கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா |
ஹிந்தியில் வெற்றி பெற்ற அந்தாதூன் படம் தமிழில் பிரசாந்த் நடிக்க ரீ-மேக் ஆகிறது. மோகன் ராஜா இயக்க, பிரசாந்தின் தந்தை தயாகராஜனே தயாரிக்கிறார். இப்படத்தில் ஹிந்தியில் நடித்த தபுவையே தமிழிலும் நடிக்க வைக்க பேசி வருகின்றனர். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக செய்தி வெளியானது.
இதை மறுத்துள்ள தியாகராஜன், ஏப்ரல் முதல்வாரத்தில் படப்பிடிப்பை துவங்க இருந்தோம். கொரோனாவால் படப்பிடிப்பு தள்ளி போய்விட்டது. தபுவிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். இப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பதாக வந்த தகவலும் பொய்யே. யார் இசையமைப்பாளர் என்பதை விரைவில் அறிவிப்பேன். பிரசாந்த் ஐந்து வயது முதலே பியானோ வாசிக்கிறார். லண்டன் மியூசிக் கல்லூரியில் கிரேடு 4ல் தேர்ச்சி பெற்றவர். இந்தப்படத்தில் பியானோ கலைஞராக நடிப்பில் நிச்சயம் அவர் அசத்துவார் என்றார்.