Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துணை நடிகர்கள் கதறல் - ரூ.25 லட்சத்தை அள்ளி தந்த லாரன்ஸ்

17 ஏப், 2020 - 16:33 IST
எழுத்தின் அளவு:
Raghava-lawrence-donates-Rs.25-lakhs-to-Nadigarsangam

கொரோனா வைரஸ் பாதிப்பால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கால் பல தொழில்கள் முடங்கி உள்ளன. சினிமா கலைஞர்கள் பலரும் அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பெப்சி கலைஞர்களுக்கு பலரும் உதவி உள்ளனர். ஆனால் நடிகர் சங்கத்திற்கு ஒரு சிலர் மட்டுமே உதவி உள்ளனர்.

அந்த சங்கத்தில் நடிகர்கள், துணை நடிகர்கள், நாடக கலைஞர்கள் என 3 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் உள்ளனர். இவர்களில் பலருக்கு படப்பிடிப்பு இருந்தால் மட்டுமே வருமானம். இந்நிலையில் நடிகர் சங்கம் சார்பில் இப்போது உள்ள தனி அதிகாரி உறுப்பினர்களுக்கு ரூ.500 வழங்கி உள்ளார். ஆனால் இது போதுமானது அல்ல. இதனால் பல நடிகர்கள் கண்ணீர் மல்க தங்களின் நிலையை வீடியோவாக கூறியிருந்தனர்.

இந்நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கும், நடன கலைஞர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், அமைப்புசாரா மற்ற தொழிலாளர்களுக்கும் ரூபாய் மூன்று கோடியை வாரி வழங்கியது மட்டுமில்லாமல் இன்னும் சில திரைத்துறையை சார்ந்தவர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் நிதி உதவி வழங்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். இப்போது நடிகர்களின் இந்த நிலை கண்டு மேலும் ரூ.25 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

இதுப்பற்றி டுவிட்டரில் லாரன்ஸ், ''இப்போதுதான் இந்த வீடியோவைப் பார்த்தேன். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 25 லட்சம் ரூபாய் வழங்குகிறேன். ஒரு சிறிய வேண்டுகோள். யூனியனிலிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் எனக்கு ஏராளமான வீடியோக்கள் வருகின்றன. தனி ஆளாக என்னால் முடிந்த அளவு உதவிகள் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. யாராவது உதவி செய்ய விரும்பினால் என்னோடு சேர்ந்து கொள்ளலாம். ஒரு ரூபாய் கூட உதவிகரமாக இருக்கும். சேவையே கடவுள்" எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஊரடங்கை தளர்த்த வேண்டாம்: அரசுக்கு பார்த்திபன் வேண்டுகோள்ஊரடங்கை தளர்த்த வேண்டாம்: அரசுக்கு ... அந்தாதூன் தமிழ் ரீ-மேக் - தபு நடிக்க மறுப்பா? அந்தாதூன் தமிழ் ரீ-மேக் - தபு நடிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Bhaskaran - Chennai,இந்தியா
17 ஏப், 2020 - 19:09 Report Abuse
Bhaskaran பெரிய நடிகனுங்க என்ன செய்யறாங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in