நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் முன்னணியில் இருந்து வருகிறவர்கள் சாஹத் கன்னா மற்றும் சிம்ரன் கன்னா. இருவருமே முன்னணி தொலைக்காட்சிளில் முக்கிய தொடர்களில் நடித்து வருகிறார்கள்.
சகோதரிகளில் மூத்தவரான சாஹத் கன்னா 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் பர்ஹானை விவாகரத்து செய்தார். கணவன் தன்னை உடலாலும், மனதாலும் டார்ச்சர் செய்தார் என்பதுதான் அவரது குற்றச்சாட்டு. விவாகரத்து பெற்ற சாஹன் கன்னா தற்போது தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தங்கை சிம்ரன் கன்னா, தனது கணவர் பரத் துதானியை விவாகரத்து செய்துள்ளார். கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்த இவர்கள் பரஸ்பரம் ஒப்புதலுடன் பிரிந்துள்ளனர். தற்போது இவருக்கும் விவாகரத்து கிடைத்துள்ளது. இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.
இதுகுறித்து சிம்ரன் கன்னா கூறியிருப்பதாவது: விவாகரத்து பெற்றாலும் பரத் மீது எந்த கோபமும் இல்லை. மனமொத்து பிரிந்துவிட்டோம். எங்கள் மகன் வினீத் பரத்துடன் இருப்பான். நான் அடிக்கடி வினீத்தை சந்திப்பேன் .என்கிறார்.