Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா காலத்திலும் திருந்தாத மீரா மிதுன்!

15 ஏப், 2020 - 23:20 IST
எழுத்தின் அளவு:
Meeramithun-posting-glamour-photos-even-in-corona-time

முன்பை மாதிரி ஊடகங்கள் மற்றும் படங்களில் கவர்ச்சிப் படங்கள் வெளியிட்டு தான் நடிகைகள் பிரபலமாக வேண்டும் என்றில்லை இப்போது. சமூகவலைதளங்கள் வாயிலாக தங்களைத் தாங்களே எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசு பொருளாக வைத்திருக்கும் வித்தையை நடிகைகள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள்.

அடிக்கடி பிகினி போன்ற கவர்ச்சி உடைகளில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகின்றனர். அதனாலேயே கைகளில் படவாய்ப்பே இல்லாத நடிகைகளுக்குக் கூட சமூகவலைதளங்களில் பாலோயர்கள் அதிகம். மீரா மிதுன், ரம்யா பாண்டியன், ஸ்ரீரெட்டி என இந்தப் பட்டியலில் நடிகைகள் ஏராளம்.

அதிலும் மீரா மிதுன் ஆட்டம் எப்போதுமே சற்று கூடுதல் தான். தன்னைப் பற்றிய எந்த விமர்சனங்களையுமே காதில் போட்டுக் கொள்ளாமல், கவர்ச்சிப் படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவற்றில் சில கண்களைக் கூச வைக்கும் ரகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

நாடே கொரோனா பயத்தில் வீடடங்கி உள்ள நிலையில், அது எது பற்றியும் கவலைப் படாமல் வழக்கம் போலவே தனது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் மீரா. கடந்த சில தினங்களுக்கு முன்புகூட லைவ்வில் வந்து நெட்டிசன்களிடம் பேசினார். அப்போதும் அறுவருக்கத்தக்க வகையில் அவரிடம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப, தன் பாணியில் நாகரீகம் இல்லாமல் மீரா அதற்கு பதிலடியும் கொடுத்தார்.

இந்நிலையில் நேற்று அவர் சம்பந்தமே இல்லாமல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். முன்பு நடந்த போட்டோஷூட்டின் போது எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் பிகினியில் படு கவர்ச்சியாக காணப்பட்டார் மீரா. நாடே கொரோனா காரணமாக பொருளாதாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகளைச் சந்தித்து வரும் வகையில் இது தேவைதானா என நெட்டிசன்கள் கோபமாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் வழக்கம் போலவே மீரா இதையெல்லாம் கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை.

மற்ற நேரங்களில் ஓகே.. இது போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில் கூட, இங்கிதம் இல்லாமல் நடந்து கொள்வது சரியா என மீரா மட்டுமல்ல.. மீராவைப் போலவே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் மற்ற நடிகைகளும் சிந்தித்தால் நல்லது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
எனக்கும், ஹரீஷுக்கும் கல்யாணம்: ஷாக் தந்த ரைசா!எனக்கும், ஹரீஷுக்கும் கல்யாணம்: ஷாக் ... உதவி! உதவி!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Loganathaiyyan - Kolkata,இந்தியா
18 ஏப், 2020 - 18:21 Report Abuse
Loganathaiyyan இதில் என்ன தவறு அவர்கள் தோல் காமி பணம் பண்ணு தொழில் செய்பவர்கள் வெளியே என்னவோ நடிகன் நடிகை என்று சொல்லிக்கொள்வார்கள்
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
18 ஏப், 2020 - 13:52 Report Abuse
s.rajagopalan என்னங்க நீங்க ...அவங்களுக்கு தெரிந்தது ...இத்தகைய கிளுகிளுப்பை கொடுப்பதுதான் ....அவங்க பொழைப்பிலே மண்ணை போடாதீங்க
Rate this:
baala - coimbatore,இந்தியா
18 ஏப், 2020 - 09:52 Report Abuse
baala அவங்க வேலை அவங்களுக்கு, கோரினா வந்தாலும் அந்த பதிவை மக்கள் வரவேற்று பார்க்கிறார்களே. அதுதானே வேண்டும் அந்த பெண்ணுக்கு
Rate this:
Muraleedharan.M - Chennai,இந்தியா
17 ஏப், 2020 - 05:00 Report Abuse
Muraleedharan.M சம்பாதிக்க வழி தெரிந்து கொண்டாள்
Rate this:
vira - tamil naadu,இந்தியா
16 ஏப், 2020 - 11:28 Report Abuse
vira சிந்திப்பதற்கு கொஞ்சம் அறிவு வேண்டும் சார், இவர்களிடம் அது இல்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in