மலையாள இசை அமைப்பாளர் காலமானார் | எஸ்.பி.பி.,யின் 75வது பிறந்த நாள்: இசை நிகழ்ச்சிக்கு சரண் ஏற்பாடு | திருமணத்திற்கு பிறகு ஆனந்தி நடிக்கும் தமிழ் படம் | முடிவுக்கு வந்தது அநீதி | பிருத்விராஜ் படத் தலைப்பை மாற்ற வேண்டும்: இந்து அமைப்புகள் அக்ஷய்குமாருக்கு வேண்டுகோள் | யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? |
மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கல்கியின் சரித்திர நாவலான 'பொன்னியின் செல்வன்' திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாவதற்குள் கொரோனா ஊரடங்கு வந்துவிட்டது. இந்தப் பிரச்னை முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகும்.
'பொன்னியின் செல்வன்' நாவல் அதிக பக்கங்கள் கொண்ட பெரிய நாவல். அதைப் படமாக்கினால் இரண்டு, மூன்று பாகங்கள் கூட போதாது. இருப்பினும் படத்தை இரண்டு பாகமாக உருவாக்கப் போவதாக மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் மனைவி சுஹாசனியுடன் நேரலை நிகழ்வில் பங்கேற்ற போது இதை அவர் தெரிவித்தார். படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளிவரும் எனத் தெரிகிறது.