அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் |
கொரோனா ஊரடங்கால் திரையுலகினர் வீட்டில் முடங்கி உள்ள நிலையில் வீட்டில் அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களை கூட சமூகவலைதளங்களில் பதிவிட்டு தங்களை எப்போதும் லைம் லைட்டிலேயே வைத்து வருகின்றனர். அதிலும் சிலர் எதற்கும் உதவாத சவால்கள் என்ற பெயரில் ஏதேதோ செய்கின்றனர். சிலர் வீட்டு வேலைகளையும், சமைக்கவும் கற்று வருகின்றனர். இன்னும் சிலரோ கதை, திரைக்கதை கூட எழுதுகின்றனர். ஒரு சில நடிகைகள் இந்த உலகில் என்ன நடந்தால் நமக்கு என்ன என இப்போதும் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஒரு சில நடிகைகள் மட்டும் தான் கொரோனா காலத்தில் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்கின்றனர். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நடிகைகள் நிகிலா விமல், ஆத்மியா போன்றவர்கள் களத்தில் இறங்கி வேலை பார்க்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு தேவையானதை செய்து கொடுக்கும் கால்சென்டரில் வேலை பார்த்துள்ளனர். சில தினங்களுக்கு முன் நிகிலா செய்தார். இப்போது அத்மிகாவும் அந்த பணியை செய்துள்ளார்.
இதுகுறித்து ஆத்மியா கூறுகையில் கேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்தில் அரசு சார்பில் கால்சென்டர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மக்களுக்கு தேவையான விஷயங்களை போனில் ஆர்டர் எடுத்து, அதை இலவசமாக கொண்டு போய் சேர்க்கும் பணி. இங்கு சில நாட்கள் சேவை அடிப்படையில் நானும் வேலை பார்த்தேன். சில ஆர்டர்களை நானும் போனில் வாங்கினேன், சிலருக்கு நானும் பொருட்களை கொண்டு கொடுத்தேன். ஏதோ நம்மால் முடிந்த உதவி என்றார்.