Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனைவியை பிரிய ஜூவாலா காரணமா? - விஷ்ணு விஷால் பதில்

13 ஏப், 2020 - 15:22 IST
எழுத்தின் அளவு:
Vishnu-vishal-about-relationship-with-jwala-gutta

நடிகர் விஷ்ணு விஷால், தனது மனைவி ரஜினியை சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்தார். பேட்மின்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் இவர் காட்டும் நெருக்கம் தான் காரணம் என கூறப்படுகிறது. அதேசமயம் இவர்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோவை இருவருமே சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இதுப்பற்றி விஷ்ணு விஷால் ஒரு பேட்டியில் கூறியதாவது : உண்மையை சொல்கிறேன், இப்போது காதலுக்கு என் இதயத்தில் இடமில்லை. காதல் என்பது கல்யாணத்தில் முடியும். அது என் வாழ்வில் முடிந்துவிட்டது. என் காதல் திருமணத்தை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. மனைவியை பிரிந்த பின் ஜூவாலா கட்டாவை சந்தித்தேன். அவருடன் நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளேன். நேர்மறையான சிந்தனையை உடையவர் அவர். நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து வைத்துள்ளோம். 18 வயதில் வரக்கூடிய காதல் என்கிற மனநிலையில் நான் இப்போது இல்லை. 35 வயதாகிவிட்டது. அனைத்தையும் உணர்ந்த பக்குவப்பட்டவனாக நான் உள்ளேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என பார்க்கலாம்.





அதேசமயம், உண்மை என்னவென்று தெரியாமல் யூகத்தின் அடிப்படையில் சிலர் பேசுவது என் மனதை காயப்படுத்துகிறது. ஜூவாலா உடன் நான் இருக்கும் போட்டோவை பதிவிட்டால் உடனே சிலர் தவறான கருத்துக்களை பதிவிடுகிறார்கள். என் மனைவியை பிரிய ஜுவாலா கட்டா தான் காரணம் என்கிறார்கள். இன்னும் சிலர் ராட்சசன் படத்தில் அமலாபால் உடன் நான் நெருக்கம் காட்டியதாக சொல்கிறார்கள். எங்கள் பிரிவுக்கு என்ன காரணம் என இவர்களிடம் சொல்லி நான் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அது என்னுடைய தனிப்பட்ட விஷயம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சிவகார்த்திகேயனின் ஹீரோ அறிமுகம் இவரால் நிகழ வேண்டியதுசிவகார்த்திகேயனின் ஹீரோ அறிமுகம் ... தியேட்டர்களில் சீட்டைக் குறைக்க திட்டம் ? - சரி வருமா ? தியேட்டர்களில் சீட்டைக் குறைக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

14 ஏப், 2020 - 13:01 Report Abuse
மீரா அப்போ ஊருக்கு உபதேசம் பண்ணாதே திரையில ....
Rate this:
இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14 ஏப், 2020 - 10:09 Report Abuse
இந்தியன்... விவசாயி மகன் தனிப்பட்ட விஷயங்களை வலைத்தளங்களில் எதற்கு பகிரணும், அப்பறம் குத்துதே குடையுதே என்று ஏன் கதரனும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in