Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கொரோனா காலத்திலும் கிளம்பும் மீ டூ புகார்

13 ஏப், 2020 - 09:59 IST
எழுத்தின் அளவு:
Actress-Maanvi-Gagroo-metoo-complaint-against-director

ஹிந்தி நடிகை மான்கி க்ரூ. டில்லியை சேர்ந்த மாடல் அழகியான இவர் தூம் மச்சா தூன் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து புகழ்பெற்றார். அதன் மூலமாக சினிமாவுக்கு வந்தார். தி கிரீட்ச் கேர்ள் ஒன் வோர்ல்ட் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பிறகு நோ ஒன் கில்டு ஜெசிகா, ஏ கொஸ்டின் மார்க், பிகே, கய் இன்தி ஸ்கை, உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது வெப்சீரிசில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக அவர் நடித்த சீரிஸ் மேட் இன் ஹெவன்.

கொரோனா பிரச்சினை உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒரு தயாரிப்பாளர் மீது பரபரப்பான மீடூ பாலியல் புகார் கூறியிருக்கிறார் மான்வி க்ரூ. இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:

ஒரு பிரபலமான தயாரிப்பாளர் வெப் சீரிஸ் ஒன்றில் நடிப்பதற்காக என்னை போனில் அழைத்தார். போனிலேயே கதை சொன்னார். பிடித்திருந்தது நடிக்க ஒப்புக் கொண்டு எனது சம்பளத்தை சொன்னேன். ஆனால் அவர் நான் கேட்டதை விட 3 மடங்கு அதிகமாக தருவதாக சொன்னார். எனக்கு அதிர்ச்சி. அதேசமயம் எதற்கு கூடுதலாக சம்பளம் தருகிறீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு அவர் "இந்த சம்பளம் உங்கள் நடிப்புக்கு மட்டுமல்ல எல்லாவற்றுக்கும் சேர்த்து" என்றார். அவர் சொன்னதன் பொருள் எனக்கு புரிந்தது. இப்படி பேச உங்களுக்கு எவ்வளவு துணிச்சல், பெண் என்றால் அவ்வளவு கேவலமா, இனிமேல் இதுபற்றி பேசினால் போலீசில் புகார் அளிப்பேன் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டேன் என்றார்.

அந்த நபரின் பெயரை மான்வி கூறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கம்பீரம்!கம்பீரம்! சமையலில் இறங்கிய கங்கனா ரணவத் சமையலில் இறங்கிய கங்கனா ரணவத்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

அருணாசலம், சென்னை பெயர் சொன்னால் பொய்யாக இருந்தால் அவர் மறுத்து வழக்கு போடுவாரே? உண்மையாகவே இருந்தால் அவ்வாறு கூறியவருக்கு பயம் இருக்கும்.
Rate this:
Ravi Chandran - Vienna,ஆஸ்திரியா
13 ஏப், 2020 - 16:18 Report Abuse
Ravi Chandran பெண் என்றால் அவ்வளவு கேவலம் அல்ல, நடிகை என்றால் தான் அவ்வளவு கேவலம், நடிகை என்ற உடன் பேரம் பேசி இருக்கிறார், ரெட் சரி இல்லை என்றால் முடியாது என சொல்லி விட்டு போக வேண்டியது தானே, என்ன குய்யோ முய்யோ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in