Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை ஜாக்குலினை தாக்க முயன்ற பக்கத்து வீட்டுக்காரர்

12 ஏப், 2020 - 16:22 IST
எழுத்தின் அளவு:
Jacqueline-suffered-by-neighbor-man

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் அறிமுகமானவர் நடிகை ஜாக்குலின். பின்னர் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்து அசத்தினார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜாக்குலின் தனக்கு நேர்ந்த கொடுமையான சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். "இன்று எனக்கும் எனது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே சண்டை நடந்தது. நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன். எனது பக்கத்து வீட்டு வாசலில் தெரு நாய்களுக்கு சாப்பாடு வைத்துவிட்டேன். எனது வீட்டிலும் நாய் இருப்பதால் தெரு நாய்கள் வரும் போது அது சத்தம் போடுகிறது (அது மிகப்பெரிய தவறு).

எனது தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டுவிட்டேன். ஆனால் இந்த சண்டையின் போது அவர் பயன்படுத்திய ஒரு வார்த்தை என்னை மிகவும் தொந்தரவு செய்துவிட்டது. வீடு புகுந்து சாத்திருவேன்.. கிறிஸ்துவ பொண்ணு என்பதால் விடுறேன்' என அவர் கூறினார்.

இந்த பிரச்சினைக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம் என எனக்கு தெரியவில்லை. இந்த கடினமான சூழ்நிலையிலாவது குறைந்தபட்சம் மனிதர்களாக இருப்போம்", என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
பிகினி போட்டோவை வெளியிட்ட ஹன்சிகா!பிகினி போட்டோவை வெளியிட்ட ஹன்சிகா! மஹிமாவிடம் கேட்கக் கூடாத கேள்வியை கேட்ட நெட்டிசன் மஹிமாவிடம் கேட்கக் கூடாத கேள்வியை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

Endrum Indian - Kolkata,இந்தியா
17 ஏப், 2020 - 18:14 Report Abuse
Endrum Indian முஸ்லிம்கள் கிறித்துவர்கள்னா இப்படித்தானிருப்பார்களா???வீடு புகுந்து சாத்திருவேன், கிறித்துவப்பொண்ணுன்னு விடறேன். இப்போ அது தானே நடக்குது. ஏதாவது முஸ்லீம் (தப்லிக் மாதிரி) கிருத்துவன் (கேரளா பாதிரிகள்) தப்பே செய்தாலும் மைனாரிட்டி என்று என்னை என்று பிலாக்கணம் வைப்பார்கள் என்ற பயம் தான். இன்று கூட அல்ல பிலாக்கணம் 5 முறை பக்கத்தில் உள்ள 5 மசூதிகளிலிருந்து கொல்கத்தாவில்??ஏன் முஸ்லீம் ஆகவே அவனை ஒன்றும் சொல்லக்கூடாது சொன்னால் மைனாரிட்டி செக்குலர் பொறுமை காக்கவேண்டும் என்று இந்துக்களுக்கு அறிவுரை மட்டும் வரும்
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
16 ஏப், 2020 - 20:06 Report Abuse
 nicolethomson என்ன பொண்ணு நீ ? இதுல மதத்தை வேற கொண்டு வர்ற ? நீ வேலை பாக்குற டிவி உன்னுடைய தரத்தை சொல்லும்
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
16 ஏப், 2020 - 19:48 Report Abuse
Pannadai Pandian \ மொதல்ல வாயில்லா ஜீவன்களுக்கு தான் சாப்பாடு.....
Rate this:
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
16 ஏப், 2020 - 16:41 Report Abuse
Palanisamy Sekar நல்லவேளை இத்துடன் விஷயம் முடிந்தது. இல்லைன்னா இந்த விஷயம் உலகப்போருக்கு இட்டு சென்றிருக்கும். ஜாக்குலின் ஆர்மி இந்நேரம் அந்த வீட்டுக்கார பெரியவரை துவைத்து சாத்தியிருக்கும். யாரும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தவேண்டாம் என்று அறிக்கை வெளியிடுவாரா இந்த ஜாக்குலின். பொறாத காலம் இந்த தேசத்துக்கே..
Rate this:
raja - Doha,கத்தார்
16 ஏப், 2020 - 15:18 Report Abuse
raja எல்லாவற்றிலும் மதம், இவ்வுலகம் எங்கு செல்கிறது? அப்பா கிறிஸ்ட்டின் என்பதால் விட்டுவிட்டார்? வேறு எந்த மதமாக இருந்து இருந்தால் அவர் அடித்திருக்க வாய்ப்பு அதிகம் இப்படிப்பட்ட மதம் கொண்ட மனிதர்களை என்ன சொல்வது?.....
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in