ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் போது என்ன செய்ய வேண்டும், என்பது குறித்தும் கொரோனா விழிப்புணர்வு குறித்தும் நடிகர், நடிகைகள் பேசி வருகிறார்கள். கொஞ்சம் வித்தியாசமாக நடிகை ராய் லட்சுமி ஊரங்கிற்கு பிறகு என்னவெல்லாம் நடக்கும் என்பதை கணித்துச் சொல்லியிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: ஊரங்கு முடிந்ததும் சிலர் தேச பக்தியோடு ரோட்டுக்கு வந்து கொடி பிடித்து கொண்டாடுவார்கள், கொரோனாவை வென்று விட்டோம் என்று பாடல் பாடுவார்கள், சுதந்திரமாக வேகமாக வாகனம் ஓட்டுவார்கள், ஓட்டல்கள், மால்கள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படும். அங்கு மக்கள் திரள்வார்கள்.
சில கார்பரேட் நிறுவனங்கள் ஊரங்கு நாட்களில் இழந்ததை திரும்ப பெற ஊழியர்களை அதிக நேரம் வேலை வாங்கும். கொரோனாவாவுக்கு பயந்து சொந்த ஊருக்கு போனவர்கள் பிழைக்க வந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனால் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதும், முககவசங்கள் தூக்கி எறியப்படும், கை கழுவுதல் மறந்து போகும். மீண்டும் எங்கோ ஒரு புள்ளியில் இருந்து கொரோனா புறப்பட்டு வரும்.
இதை தவிர்க்க வேண்டுமானால் கொரோனாவை 100 சதவிகிதம் விரட்டும் வரை சுய கட்டுப்பாடு கொண்டு நடக்க வேண்டும், குறிப்பாக சமூக விலகலை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும், விழாக்களை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.