திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
திரிஷா இல்லேன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். தன் படங்களிலேயே சிறப்பு வேடத்தில் நடித்தவர், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் கெட்டிவ் வேடத்தில் நடித்தார். தற்போது, ஜிவி.பிரகாஷ், அமைரா, சஞ்சிதாவை வைத்து காதலை தேடி நித்யானந்தா மற்றும் பிரபுதேவாவை வைத்து பகீரா படங்களை இயக்குகிறார். பொதுவாக இவரது படங்களில் ஆபாச நெடி சற்று தூக்கலாக இருக்கும்.
இப்போது இயக்கி வரும் படங்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, காதலை தேடி நித்யானந்தா படம், காதல் படமாக உருவாகிறது. பசங்களுக்கான படமாக இருக்கும். அனைத்து தரப்பினரும் பார்க்கும் விதமாகவே இந்தப்படம் இருக்கும். பகீரா படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துவிட்டது. கொரோனாவால் படப்பிடிப்பு நிற்கிறது. இது ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் படம். நேர்கொண்ட பார்வைக்கு பின் சில படங்களில் நடிக்க கூப்பிட்டார்கள். ஆனால், என் படத்தில் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியவில்லை. இருப்பினும் ஒரு படத்தில் நடித்துள்ளேன். அதுப்பற்றி இப்போது கூற முடியாது. நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன் என்கிறார்.