பழம்பெரும் ஹிந்தி நடிகை சுலோச்சனா லட்கர் மறைவு : பிரதமர் இரங்கல் | தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை | பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம் | 24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ் | 2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் | கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள் |
தெலுங்குத் திரையுலகில் தற்போதைய பிரம்மாண்டமான தயாரிப்பு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்'. ஜுனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவகன், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் இப்படம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் நேற்று தெலுங்குத் திரைப்படத் தொழிலாளர்களுக்காக 10 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தது. டுவிட்டரில் தெரிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பில் இயக்குனர் ராஜமவுலியும் டேக் செய்யப்பட்டிருந்தார்.
ராஜமவுலி இதுவரை எந்தவிதமான கொரோனா நன்கொடையும் வழங்கவில்லை. ஆனால், அவரது பெயர், தயாரிப்பு நிறுவனத்தின் பதிவில் டேக் செய்யப்பட்டதால் அவரும் அந்த 10 லட்சத்தைச் சேர்ந்து கொடுத்துள்ளார் என தெலுங்கு ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
'ஆர்ஆர்ஆர்' படத்திற்காக 50 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்கும் ராஜமவுலி ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்றும் கேட்டுள்ளார்கள்.
ஆனால், ராஜமவுலி அவர் செய்யும் எந்தவிதமான சமூக சேவைகளையும் வெளியில் சொல்ல மாட்டார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.