ஆகஸ்ட் மாதமே திரைக்கு வரும் ரஜினியின் ஜெயிலர் | கண்ணீர் அஞ்சலி பேனர் உடன் நடிகர் ஜி.எம்.குமார் | காஷ்மீரில் நில அதிர்வு : சென்னை திரும்பிய விஜய் | மகனை தொடர்ந்து அப்பாவை இயக்கும் மாரி செல்வராஜ் | கிரிக்கெட் பயிற்சியில் ‛அட்டகத்தி' தினேஷ் | ஜீவா - அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் | லியோ படத்தில் நடிக்கிறாரா யு-டியூப்பர் இர்பான்? | ஜெயம் ரவி - ஏஆர் ரஹ்மான் இணையும் பான் இந்திய படம் | மீண்டும் கதை நாயகியான அபிராமி | டி.வி.யில் நேரடியாக வெளியாகும் ஆரி படம் |
'பிகில்' படத்தின் பாடல்கள் யு-டியுபில் 30 கோடி பார்வைகளைக் கடந்ததை இன்று டுவிட்டரில் டிரென்டிங்கில் கொண்டு வந்தார்கள் விஜய் ரசிகர்கள். சரி, தமிழ்த் திரைப்படப் பாடல்களில் அதிகப் பார்வைகளைப் பெற்றுள்ள 'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' பாடல் 1 பில்லியனை நெருங்கிவிட்டதா என இந்த நேரத்தில் யோசனை வந்தது.
எனவே, 'மாரி 2' பாடல்களை யூ-டியுப் பக்கம் போய்ப் பார்த்தோம். ரவுடி பேபி வீடியோ பாடல் மட்டும் 81 கோடியே 70 லட்சம் பார்வைகளைத் தாண்டி உள்ளது. அதன் லிரிக் வீடியோ 8 கோடியே 80 லட்சம் பார்வைகளையும், மேக்கிங் வீடியோ 1 கோடியே 70 லட்சம் பார்வைகளையும், அதன் வீடியோ புரோமோ 60 லட்சம் பார்வைகளையும் இதுவரை பெற்றுள்ளன. ஆக, இவற்றின் ஒட்டு மொத்த பார்வைகள் 92 கோடியைத் தாண்டியுள்ளன. இது தமிழ்ப் பாடலின் பார்வைகள் மட்டும்.
தெலுங்கில் வெளியான 'மாரி 2 - ரவுடி பேபி' பாடலுக்கும் அதிகமான வரவேற்பு கிடைத்தது. அதில் வீடியோ பாடலுக்கு 3 கோடியே 43 லட்சம் பார்வைகளும், லிரிக் வீடியோவிற்கு 1 கோடியே 85 லட்சம் பார்வைகளும் கிடைத்துள்ளன. அடுத்து ஆடியோ இணையதளங்களில் மட்டும் மொத்தமாக 7 கோடி முறை கேட்கப்பட்டுள்ளது. இவற்றையும் கணக்கில் சேர்த்தால் 'ரவுடி பேபி' பாடல் மட்டும் மொத்தமாக 100 கோடியைத் தாண்டிவிட்டது.
அதே நேரத்தில் 'ரௌடி பேபி' தமிழ்ப் பாடல் வீடியோ மட்டுமே அடுத்த சில வாரங்களில் தனியாக 100 கோடியைத் தொட்டுவிடும்.