ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
பிரேமம் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு, மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அனுபமாவின் முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்ட விஷயம் தெரியவந்துள்ளது. அவரது முகநூல் கணக்கை ஹேக் செய்த மர்மநபர்கள், அனுபமாவின் மார்ஃபிங் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படத்தை அதில் வெளியிட்டனர். இதை பார்த்து அதிர்ச்சியும் கோபமும் அடைந்த அனுபமா, இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுபற்றி அவர் கோபத்துடன் பதிவிட்டுள்ளார். " இந்த முட்டாள் தனமான செயலுக்கு இவ்வளவு நேரத்தை செலவிட்டீர்களா. உங்களுக்கு எல்லாம் அம்மா, அக்கா, தங்கை கிடையாதா? உங்கள் மூளையை வேறு ஏதாவது நல்ல விஷயத்துக்கு பயன்படுத்துங்கள்" என கோபமாக பதிவிட்டுள்ளார்.
இதேபோல் சில தினங்களுக்கு முன்னர் நடிகை பிக் பாஸ் லாஸ்லியாவின் வீடியோ என ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.