தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' |
மத்திய, மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளிப்பதாக நேற்றைய முன்தினம் அறிவித்தார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், ஃபெப்சி அமைப்புக்கு ரூ.50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் என பிரித்து வழங்குவதாக அவர் கூறினார்.
மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.25 லட்சமும், தான் பிறந்து வளர்ந்த ராயபுரம் மற்றும் தேசியாநகர் பகுதியில் உள்ள தினக்கூலி தொழிலாளர்களுக்கு ரூ.75 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் லாரன்ஸ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தான் நிதியுதவி அறிவித்த பின்னர் மற்ற சங்கங்களை சேர்ந்த பலரும் தனக்கு போன் செய்து உதவி கேட்டதாக கூறியுள்ளார். பொதுமக்கள் கண்ணீருடன் அனுப்பிய வீடியோக்களை பார்த்து தாம் தூக்கம் இழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே தனது ஆடிட்டருடன் கலந்து பேசி, உதவி தொகையை மேலும் அதிகரிப்பது பற்றி முடிவெடுக்க உள்ளதாக லாரன்ஸ் கூறியுள்ளார். அது பற்றி இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துளளார்.
இந்நிலையில் மாலை 5மணிக்கு அவர் பதிவிட்ட மற்றொரு டுவீட்டில், எனது ஆடிட்டரிடம் இதுப்பற்றி விசாரித்தேன். அவர் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார். ஆகவே நான் மேற்கொள்ள இருக்கும் அறிவிப்பை ஏப்., 14, தமிழ் புத்தாண்டு அன்று அறிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.