பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
நடன கலைஞராக இருந்து நடன இயக்குனராகி பின்னர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என வளர்ந்தவர் ராகவா லாரன்ஸ். முனி, காஞ்சனா படங்களின் மூலம் பேய் பட சீசனை தொடங்கி வைத்து இன்று அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
இவர் இயக்கிய காஞ்சனா படம் தற்போது இந்தியில் லட்சுமிபாம் என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதில் அக்ஷ்ய் குமார் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்க அக்ஷய் குமாருக்கு 100 கோடி சம்பளம் என்கிறார்கள். இந்த நிலையில் படத்தை இயக்கும் ராகவா லாரன்சுக்கு ரூ.40 முதல் 50 கோடி சம்பளம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மையா என தெரியவில்லை. ஒரு வேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் பெறும் இயக்குனர்களில் லாரன்ஸ் முதலிடம் பிடிப்பார் என்கிறார்கள்.