விக்ரம்' பட பிரமோஷனில் 'பஞ்சதந்திரம்' குழு | தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல் | சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார் | ஒருவேளை மங்காத்தா 2வாக இருக்குமோ - வைரலான புகைப்படம் | போதைப்பொருள் வழக்கு - ஷாருக்கான் மகன் ஆரியன் கான் அப்பாவியாம் | விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் | கன்னட படத்தில் நடித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | கேரள முதல்வரை சந்தித்த பாதிக்கப்பட்ட நடிகை | மலையாளத்தில் இன்று ஒரே நாளில் 2 போலீஸ் படங்கள் ரிலீஸ் | ஷங்கர் - ராம்சரண் படத்தின் டைட்டில் ‛அதிகாரி' |
கொரோனா தாக்கம் இந்தியாவில் பெரிய அளவில் பரவ விடாமல் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இதற்கு முன்பே கொரோனாவின் பிடியில் சிக்கிய பல நாடுகள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் நியூஜெர்சியில் தற்போது நிலவும் சூழல் பயமுறுத்துவதாக இருக்கிறது என நடிகை அங்கிதா அச்சம் தெரிவித்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான லண்டன் மற்றும் தகதிமிதா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தான் இந்த அங்கிதா. பல ஆண்டுகளுக்கு முன் ரஸ்னா குளிர்பான விளம்பரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவரும் இவரே.. திருமணத்திற்குப்பின் நியூ ஜெர்சியில் செட்டிலாகிவிட்ட இவர் தற்போது அங்கு நிலவும் பதட்டமான சூழல் குறித்து ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.
“தற்போது மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. மருத்துவர்களும் கொரோனா நோயாளிகளை தவிர வேறு எந்த நோயாளிகளையும் கவனிப்பதில்லை.. அத்தியவாசிய உணவு பொருட்களை வாங்குவதற்கு கூட வீதியில் இறங்க முடியாமல் வீட்டிலேயே அடைந்து கிடக்கின்றோம்.. அனைவரும் வீட்டிற்குள்ளேயே பத்திரமாக இருங்கள்” என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் அங்கிதா.