திருமணத்திற்கு பிறகு ஆனந்தி நடிக்கும் தமிழ் படம் | முடிவுக்கு வந்தது அநீதி | பிருத்விராஜ் படத் தலைப்பை மாற்ற வேண்டும்: இந்து அமைப்புகள் அக்ஷய்குமாருக்கு வேண்டுகோள் | யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் |
கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் வகையில் தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர், திரையுலகினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் மத்திய, மாநில அரசுகளுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். திரையுலகினரை பொருத்தமட்டில் மற்ற மொழி கலைஞர்கள் அள்ளி கொடுத்துள்ளனர். தமிழில் பெப்சி அமைப்புக்கு நடிகர்கள் சில உதவினாலும் மத்திய, மாநில அரசுகளுக்கு அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஒன்றிரண்டு பேர் மட்டுமே நிதி உதவி அளித்துள்ளனர்.
அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 கோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் தான் நடிக்க இருப்பதாக மகிழ்ச்சி உடன் கூறியுள்ளார்.
இந்த படத்திற்காக தனக்கு கிடைக்கும் முன்பணத்தில் இருந்து, ரூ.3 கோடியை கொரோன நிவாரண நிதிக்கு அளிப்பதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், தமிழ்நாடு முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், பெப்சி அமைப்புக்கு ரூ.50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க அவர் முடிவு செய்துள்ளார்.
மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.25 லட்சமும், தான் பிறந்து வளர்ந்த ராயபுரம் மற்றும் தேசியாநகர் பகுதியில் உள்ள தினக்கூலி தொழிலாளர்களுக்கு ரூ.75 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் லாரன்ஸ் அறிவித்துள்ளார். இவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் வழங்கப்படும் என லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.