'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஹாலிவுட் நட்சத்திரங்களை தினமும் பலி கொண்டு வருகிறது. தினமும் யாராவது ஒரு ஹாலிவுட் நட்சத்திரம் கொரோனாவுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை 2 ஹாலிவுட் நடிகர்களும், 2 நடிகைகளும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்த வரிசையில் அடுத்து பலியாகி இருப்பவர் நடிகர் ஜாய் பெனடிக். ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ஏலியன்ஸ், தி ஒயிட் நைட், அபோகலிப்ட்ஸ் கோட் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர்.
68 வயதான ஜாய் பெனடிக், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு ஹாலிவுட் நடிகர்கள் அனுதாபத்தையும், அதிர்ச்சியையும் தெரிவித்து வருகிறார்கள்.