விக்ரம்' பட பிரமோஷனில் 'பஞ்சதந்திரம்' குழு | தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல் | சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார் | ஒருவேளை மங்காத்தா 2வாக இருக்குமோ - வைரலான புகைப்படம் | போதைப்பொருள் வழக்கு - ஷாருக்கான் மகன் ஆரியன் கான் அப்பாவியாம் | விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் | கன்னட படத்தில் நடித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | கேரள முதல்வரை சந்தித்த பாதிக்கப்பட்ட நடிகை | மலையாளத்தில் இன்று ஒரே நாளில் 2 போலீஸ் படங்கள் ரிலீஸ் | ஷங்கர் - ராம்சரண் படத்தின் டைட்டில் ‛அதிகாரி' |
இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். அவரது இசையில் 2009ம் ஆண்டு வெளிவந்த 'டெல்லி 6' படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் 'மசக்கலி, மசக்கலி'.
அப்பாடலை தற்போது 'மசக்கலி 2.0' என ரீமிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளார்கள். நேற்று யு-டியுபில் வெளியிடப்பட்ட இப்பாடல் 24 மணி நேரத்திற்குள்ளாக 1 கோடியே 40 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இருப்பினும் தன்னுடைய பாடலை ரீமிக்ஸ் செய்து வெளியிட்டிருப்பது ரஹ்மானுக்குப் பிடிக்கவில்லை. ஏற்கெனவே அவர் இப்படி ரீமிக்ஸ் செய்வதற்கு எதிராக தன்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்.
தற்போது மீண்டும் அதை எதிர்க்கும் வகையில் 'என்ஜாய் த ஒரிஜனல்' என உடனடியாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “குறுக்கு வழியில்லை, முறையாக உருவாக்கப்பட்டது. தூங்காத பல இரவுகள், எழுதி, திரும்பவும் எழுதி, 200க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கொண்டு 365 நாட்கள் மூளையைக் கசக்கி உருவாக்கிய பாடல். பல தலைமுறையினருக்கும் இதை கொண்டு சேர்க்க பாடுபடுகிறோம்.
இயக்குனர் குழு, இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர்கள், நடன இயக்குனர்கள் ஆகியோரின் ஆதரவோடு இடைவிடாது உழைக்க படக்குழு. நிறைய அன்பும், பிரார்த்தனைகளும்...'' எனப் பதிவிட்டு ஒரிஜனல் பாடலைக் கேளுங்கள் என அப்பாடலின் யு டியூப் லின்க்கையும் பதிவிட்டு ரீமிக்ஸ் பாடலுக்கான தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.