வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா. ஏதாவது டுவீட் போட்டு, யாரையாவது வம்பிழுப்பதே அவரது வேலை.
கொரோனா நோய் எதிர்ப்பின் அடையாளமாக, பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கடந்த 5ம் தேதி இரவு 9 மணி இந்திய மக்கள் பெரும்பாலானோர் தங்களுது வீடுகளில் விளக்கேற்றினர். ஆனால் இயக்குனர் ராம் கோபால் வர்மா, சிகரெட்டை பற்ற வைத்து, அதை புகைப்படம் எடுத்து டிவீட் செய்துள்ளார்.
மேலும், "கொரோனா எச்சரிக்கையை மீறுவது என்பது, புகை பிடிக்காதீர்கள் என்ற அரசின் உத்தரவை மீறுவதைவிட மிகவும் ஆபத்தானது", என்றும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். வழக்கம் போலவே அவரது இந்த பதிவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.