பாலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ள ஷாரூக்கான் | தலைக்கூத்தல் மூலம் தமிழுக்கு வரும் பெங்காலி நடிகை | வறுமையில் வாடும் இயக்குனர் ‛குடிசை' ஜெயபாரதி | ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி | தமிழுக்கு ஹீரோவாக வரும் தெலுங்கு காமெடி நடிகர் | விமரிசையாக நடந்த பூர்ணாவின் வளைகாப்பு | படித்த கல்லூரிக்கு விசிட் அடித்த மம்முட்டி | சாஹோ டைரக்டருடன் கைகோர்த்த பவன் கல்யாண் | மோகன்லால் பட வாய்ப்பை ஒதுக்கிய ரிஷப் ஷெட்டி | விருது வழங்கும் விழாவில் மீண்டும் சந்தித்துக்கொண்ட சூபியும் சுஜாதையும் |
கடந்த ஒரு வாரமாகவே நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றிய செய்திகள் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கின்றன. பாஜக முக்கிய பிரமுகர் ஒருவரின் மகனுக்கு கீர்த்தியை மணம் முடிக்க, அவரது தந்தை முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியானது.
ஆனால் அது உண்மையல்ல என கீர்த்தி சுரேஷ் மலையாள ஊடகம் ஒன்றின் மூலம் மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் தற்போது தான் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இளம் ஹீரோ ஒருவர் கீர்த்தியிடம் காதலை தெரிவித்ததாகவும், ஆனால் அதை அவர் ஏற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால் இப்போதைக்கு காதல், திருமணம் ஆகியவற்றில் கவனம் செலுத்த தன்னால் முடியாது என கீர்த்தி திட்டவட்டமாக கூறிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.