Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா தடுப்பு - அஜித் ரூ.1.25 கோடி நிதி, விஜய் எப்போது?

07 ஏப், 2020 - 16:38 IST
எழுத்தின் அளவு:
Corona:-Ajith-Donates-Rs.1.25-crore-for-central,-state-govt-and-Fefsi-workers

அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பில் மக்களை காக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகளுக்கு தலா ரூ.50 லட்சம் நிதியும், பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் என மொத்தமாக ரூ.1.25 கோடி நிதி உதவி வழங்கி உள்ளார் நடிகர் அஜித்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவி தொடங்கிவிட்டது. ஆயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 21 நாள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த காலக்கட்டத்தில் அரசுக்கு பொருளாதார நெருக்கடி உருவாகி உள்ளது.

இதிலிருந்து மீள மத்திய மாநில அரசுகள் நிதி உதவி அளிக்கும்படி கேட்டு கொண்டுள்ளனர். டாடா குழுமம் ரூ.1500 கோடி வழங்கி உள்ளது. திரைப்பிரபலங்களில் அக்ஷ்ய் குமார் 25 கோடி வழங்கி உள்ளார். பிரபாஸ் ரூ.4 கோடி, சிரஞ்சீவி, மகேஷ்பாபு தலா ரூ.1 கோடி, பவன் கல்யாண் ரூ.2 கோடி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் மத்திய, மாநில அரசுகளுக்கு நிதி உதவி அளித்துள்ளனர்.

ஆனால் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் சிவகார்த்திகேயன் தவிர்த்து வேறு யாரும் நிதி உதவி அளிக்கவில்லை. ரஜினி, விஜய், அஜித் போன்றவர்கள் எல்லாம் அமைதி காத்து வந்தனர். இவர்களில் ரஜினியாவது தங்கள் சினிமா சார்ந்த பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம் நிதி உதவி அளித்தார். ஆனால் விஜய், அஜித் அதற்கு கூட உதவவில்லை. மக்களின் செல்வாக்கால் உயர்ந்து மக்களால் புகழ்பெற்ற நடிகர்கள் இந்த காலக்கட்டத்தில் கூட உதவாமல் இருந்தால் எப்படி என இவர்கள் மேல் விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் நடிகர் அஜித் உதவ முன் வந்துள்ளார். மத்திய, மாநில அரசுகளுக்கு தலா ரூ.50 லட்சமும், பெப்சி தொழிலாளர்களுக்கு தனியாக ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.1.25 கோடி நிதி உதவி அளிக்கிறார். இதை அவரது வங்கி கணக்கு மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தனித்தனியாக அனுப்பி வைத்துள்ளார்.

எந்த ஒரு பொது நிகழ்விலும், ஏன் தான் சார்ந்த சினிமா விழாக்களுக்கு கூட வராத அஜித், உலகில் என்ன நடந்தாலும் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார். அவரே நிதி அளிக்க முன் வந்துவிட்டார். ஆனால் எல்லா பொது நிகழ்விலும் பங்கேற்று, தன் பட விழாக்களில் அரசியல் தொடர்பாக பரபரப்பாக பேசி, அதையே படத்திற்கு விளம்பரமாகவும் பயன்படுத்தி கொண்டு, மக்கள் மத்தியில் தன்னை பெரிய ஹீரோவாக காட்டிக் கொள்பவரும், எதிர்காலத்தில் பெரிய அரசியல் கனவோடு இருப்பவருமான விஜய், எப்போது உதவ போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா ஊரடங்கு : மாடுகளை பராமரிக்கும் தீனாகொரோனா ஊரடங்கு : மாடுகளை ... இளம் ஹீரோவின் காதலை நிராகரித்த கீர்த்தி சுரேஷ்? இளம் ஹீரோவின் காதலை நிராகரித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

manithan -  ( Posted via: Dinamalar Android App )
08 ஏப், 2020 - 15:18 Report Abuse
manithan ajith really ultimate man(star)
Rate this:
nsathasivan - chennai,இந்தியா
08 ஏப், 2020 - 10:39 Report Abuse
nsathasivan அடுத்த படத்தில் ஒரு டயலாக் 1000 கோடி கொடுப்பது போல் ஒரு காட்சி வைத்து ஏமாளி ரசிகர்களை விசிலடிக்கச் செய்வார்.
Rate this:
Tamil - chennai,இந்தியா
08 ஏப், 2020 - 10:20 Report Abuse
Tamil அஜித்தின் செயல் பாராட்டப்படவேண்டியது. ரஜினி கமல் மற்றும் நடிகர்கள் பெப்சி சங்கத்துக்கு செய்யவேண்டியது அவர்களது கடமை அதை நன்கொடையில் சேர்க்கமுடியாது. பிரதமர் முதல்வர் நிவாரண நிதிக்கு 100 % வரி விலக்கு இருந்தும் இவர்கள் இருவரும் ஒன்றும் செய்தது போல தெரியவில்லை. இந்த லட்சனத்தில் இரண்டு கஞ்சங்களுக்கும் அரசியல் கட்சி வேற இதுல. இவங்க தான் மக்களை காப்பார்களா ???? சுத்த வேஸ்ட்.
Rate this:
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
08 ஏப், 2020 - 08:36 Report Abuse
aryajaffna அஜித் நல்ல மனிதர் , வீண் விளம்பரத்தை விரும்பாதவர் , தான் உண்டு , தன தொழில் என்று இருப்பவர் , அரசியல் பேசி இதுவரை கேட்டதில்லை, அனால் இவரையும் வம்புக்கு இழுப்பவர்கள் உண்டு.
Rate this:
Indian - Chennai,இந்தியா
08 ஏப், 2020 - 08:35 Report Abuse
Indian தல எப்பவும் தல தான். தி பெஸ்ட் விஜய் மாதிரி ஆளுங்க எல்லாம் சினிமா தவிர எதுக்கும் லாயக்கு இல்ல. அடலீஸ்ட் அடுத்தவங்க பண்ணுறதா எப்பவும் போல காப்பி அடிக்கலாம் ல? இவனுங்க எல்லாம் சினிமால ஹீரோவா நடிச்சா நெஜமாவே ஹீரோனு நெனச்சுக்குறாங்க. இந்த மாதிரி மெண்டல் எல்லாம் அதுவா திருந்துநா தான் உண்டு.
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in